பொது செய்தி

இந்தியா

பறக்க பாக்., அனுமதி: மோடி தவிர்த்தது ஏன்?

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: கிர்கிஸ்தானில் நடக்கும் பிஸ்கெக் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியாக விமானத்தில் செல்வதை தவிர்த்துவிட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.கிர்கிஸ்தானுக்கு செல்லும்போது பாக்., வானில் சென்றால் துாரம் குறைவு. இதற்காக, அந்நாட்டிடம் மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. அந்நாடும் அனுமதி அளித்தது. இருப்பினும் பாக்.,

புதுடில்லி: கிர்கிஸ்தானில் நடக்கும் பிஸ்கெக் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியாக விமானத்தில் செல்வதை தவிர்த்துவிட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.



latest tamil news


கிர்கிஸ்தானுக்கு செல்லும்போது பாக்., வானில் சென்றால் துாரம் குறைவு. இதற்காக, அந்நாட்டிடம் மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. அந்நாடும் அனுமதி அளித்தது. இருப்பினும் பாக்., வழியாக செல்வதை தவிர்த்துவிட்டார் மோடி.
இதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. மற்ற இந்திய விமானங்கள் தனது நாட்டின் மீது பறப்பதற்கு பாக்., அனுமதிப்பதில்லை. இதனால் விமானங்கள் சுற்றிச் செல்வதால், பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. சாதாரண மக்கள், இப்படி சிரப்படும்போது பிரதமர் மட்டும் பாக்.,கிடம் அனுமதி பெற்று பறக்கலாமா என்று ஒரு விமர்சனம் கிளம்பியது.இதையடுத்து தான், இந்த விமர்சனத்தை தவிர்ப்பதற்காக, பாக்., வான்வழியையும் மோடி தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.


latest tamil news


பாக்., தந்த அனுமதியை பிரதமர் பயன்படுத்தினால், அந்நாட்டுக்கு எதிராக நாம் எடுத்த கடுமையான நிலைப்பாடு கேள்விக்குறியாகும் என சில ஓய்வு பெற்ற வெளியுறவு துறை அதிகாரிகளும் கருதியதாக தெரிகிறது. இதுவும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மோடியின் முடிவுக்கு இதுவும் ஒரு காரணம்.


latest tamil news


முன்னாள் வெளியுறவு செயலாளர் விவேக் கட்ஜூ என்பவர் ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரையில், ‛‛இந்த சூழ்நிலையில் சாதாரண மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு இருக்க வேண்டும். மக்கள் நலத்தில் அக்கறை கொண்டுள்ள மோடி, தனது செயலிலும் அதைக் காட்ட வேண்டும்.
பாக்.,கிடம் இருந்து எந்த சலுகையையும் நாம் பெறக் கூடாது. சொந்த லாபத்திற்காக இந்தியா தனது கொள்கைகளை தளர்த்திக்கொள்ளும் என்று பாக்., கருத இடம் தரக்கூடாது'' என்று குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


சென்ற மாதம் பிஸ்கெக் மாநாடுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சென்றபோது, பாக்., மீது பறக்க இந்தியா அனுமதி கேட்டது. பாக்.,கும் அனுமதி அளித்தது. சுஷ்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், நீண்ட நேரம் பறக்க அவர் சிரமப்படுவார் என்பதாலும் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஓமன், ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக, சுற்றிக்கொண்டு செல்வதற்கு முடிவெடுத்த மோடி, தனது உடல்நிலை திடகாத்திரமாக இருக்கிறது என்பதையும் காட்டிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mugavai Anandan - Port Blair,இந்தியா
14-ஜூன்-201909:09:05 IST Report Abuse
Mugavai Anandan பாகிஸ்தானை விட பத்து மடங்கு வானெள்கையை கொண்டது இந்தியா.சிரமம் என்று பார்த்தால் பாக்கிஸ்தானுக்கே வெகு அதிகம்.இந்த அறிவு இல்லாது இந்தியாவுக்கு கண்டிஷன் அப்ளை போட்டார்கள். ஒன்றும் பிரச்சனை இல்லை ,...பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டார்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201906:55:49 IST Report Abuse
Mani . V என்னமோ சொந்த காசில் விமான டிக்கெட் எடுத்து செல்வது மாதிரி என்னா பந்தா? (அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. சாதாரண மக்கள், இப்படி சிரப்படும்போது பிரதமர் மட்டும் பாக்.,கிடம் அனுமதி பெற்று பறக்கலாமா என்று ஒரு விமர்சனம் கிளம்பியது)
Rate this:
Cancel
14-ஜூன்-201900:32:06 IST Report Abuse
ஆப்பு மக்கள் கஷ்டப்பட்டு பறப்பதால் இவரும் அப்பிடிப் போறாராம். அப்போ எதுக்கு அனுமதி கேக்கணும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X