ஜெகன் பெயரில் பதவியேற்ற எம்எல்ஏ

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
விஜயவாடா : ஆந்திராவில் சமீபத்தில் தேர்வான எம்எல்ஏ., ஒருவர், கடவுளின் பெயரால் என கூறுவதற்கு பதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரால் உறுதி ஏற்று, பதவியேற்றுள்ளார்.நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் நெல்லூர் தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்., காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, எம்எல்ஏ., ஆனவர் கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி.

விஜயவாடா : ஆந்திராவில் சமீபத்தில் தேர்வான எம்எல்ஏ., ஒருவர், கடவுளின் பெயரால் என கூறுவதற்கு பதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரால் உறுதி ஏற்று, பதவியேற்றுள்ளார்.



latest tamil news


நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் நெல்லூர் தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்., காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, எம்எல்ஏ., ஆனவர் கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி. இவருக்கு இன்று, இடைக்கால சபாநாயகராக இருக்கும் சம்பங்கி அப்பலா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமாண உறுதிமொழி வாசித்த ஸ்ரீதர்ரெட்டி, கடவுளின் பெயரால் உறுதி ஏற்கிறேன் என்பதற்கு பதிலாக , ஜெகன்மோகன் ரெட்டி பெயரால் உறுதி ஏற்பதாக கூறினார்.
இதனால் சபாநாயகர் உடனடியாக அவரிடம், கடவுளின் பெயரால் என உறுதி அளித்து பதவியேற்கும் படி அறிவுறுத்தினார். இதனையடுத்த, கடவுளின் பெயரால் என கூறி மீண்டும் பதவியேற்றார்.


latest tamil news


இது குறித்து ஸ்ரீதர் ரெட்டியிடம் கேட்ட போது, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். அரசியல் பின்னணியோ, நிதி பின்னணியோ இல்லாத குடும்பத்தை சேர்ந்தவன். என்னை 2 முறை எம்எல்ஏ., ஆக்கியவர் ஜெகன்மோகன் ரெட்டி. அதனால் எனக்கு எப்போது அவர் மீது அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அதனால் அவரது பெயரை தவிர வேறு எந்த பெயரையும் கூறி பதவி ஏற்க எனக்கு மனம் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக நான் எனது எம்எல்ஏ சம்பளத்தை ஏழை மாணவர்களின் கல்விக்காக அளித்து வருகிறேன் என உணர்ச்சிகரமாக பதிலளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஜூன்-201905:09:41 IST Report Abuse
meenakshisundaram ஆஹா படத்த பாத்ததும் நம்ம ஊரு தாதாவோன்னு நினச்சேன்
Rate this:
Cancel
14-ஜூன்-201907:42:43 IST Report Abuse
மதுவந்தி நன்றி உணர்ச்சி ரொம்பவே அதிகம். ஒருவர் பெயரால் ஏற்ற பதவிக்கு மிக நேர்மமையாக நடந்தால் பெயருக்கு பெருமை சேர்க்கும்.முதல்வருக்கு இப்படியும் அருமையான விளம்பரம். Great
Rate this:
Cancel
13-ஜூன்-201921:06:14 IST Report Abuse
ஆப்பு பாத்துங்க...கடவுள் பெயரில் ஏற்றால் ஒரு மொட்டை போட்டு பணம் உண்டியல்ல போட்டா போறும். மனுசங்க மேல உறுதிமொழி எடுத்துக்கிட்டு, ஒத்து வரலேன்னா கஞ்சா கேஸ்ல கூட உள்ளே தள்ளிருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X