விமான விபத்து : 13 பேரின் உடல்கள் மீட்பு

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
இம்பால் : அருணாச்சல பிரதேசத்தில், மாயமான ஏ.என் 32 ரக விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக 10 நாட்களுக்கு பின்னர் இந்திய விமானப்படை அறிவித்தது. தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மற்றும் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.இந்திய விமான படைக்குச் சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் கடந்த

இம்பால் : அருணாச்சல பிரதேசத்தில், மாயமான ஏ.என் 32 ரக விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக 10 நாட்களுக்கு பின்னர் இந்திய விமானப்படை அறிவித்தது.
தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மற்றும் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.



latest tamil news


இந்திய விமான படைக்குச் சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் கடந்த ஜூன் 3ல் அசாம் மாநில ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மன்சுக்காவுக்கு சென்றது. புறப்பட்ட 33 நிமிட ங்களில் அந்த விமானம் அடர்ந்த வனப்பகுதிக்குள் பறந்த போது மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இருப்பினும் வானிலை மோசமாக இருந்ததால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து விமானத்தை தேடி வந்த இந்திய விமானப்படையினர், செயற்கைகோள் புகைப்படம் மூலம் விமானம் விபத்திற்குள்ளான பகுதி அருகே, 2 ஹெகாப்டர்கள் மூலம் சென்றடைந்தனர்.


latest tamil news


10 நாள் தேடலுக்குப் பின் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டது. விமானத்தின் சிதறிய பாகங்களுடன் மனித சடலங்களும் இருப்பதைக் கண்ட அவர்கள், ஏ. என். 32-ல் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என அறிவித்தனர். தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் 13 பேரின் உடல்களும், விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 13 பேரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும் இந்திய விமானப் படை கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி மோடி அரசை பாராட்ட வேண்டும். தொலைந்து போன விமானத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். விமானத்தை கண்டுபிடிக்க துப்பு இல்லை என்று இங்கு ஒரு மரத்தமிழன் வருத்தம் தெரிவித்தார். தமிழனுக்கு தமிழக எல்லையை தாண்டினாலே எல்லாம் கஷ்டம் தான். மொழி உணவு தட்ப வெப்பநிலை எல்லாம். ஆக்ரா வெய்யிலே தாங்க முடியவில்லை. இவர்கள் கடுமையான இமயமலையில் விமானம் விழுந்தவுடன் தேடவில்லையாம் மோடி. எப்படி இருக்கிறது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-201921:18:08 IST Report Abuse
தமிழவேல் பக்கத்தில் வீடுகளும் உள்ளுர்வாசிகளும் தென்படுகின்றனர்.
Rate this:
Cancel
13-ஜூன்-201921:03:20 IST Report Abuse
ஆப்பு இதுக்கெல்லாம் காரணம் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்து வாங்குன விமானங்கள்தான். எறங்கி அடிச்சு சர்ஜிக்கல் ஸ்டிரைக் செஞ்சா அது எங்க சாமர்த்தியம்...வந்து கூவுங்க..
Rate this:
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
14-ஜூன்-201906:39:18 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்உங்க ஆளுங்க தான் கோவை'ல NIA அதிகாரிகள் வசம் சிக்கிக்கொண்டார்கள்.... அங்க போய் கூவவும் பாய்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X