பொது செய்தி

இந்தியா

ரயிலில், 'மசாஜ்' எதுக்குங்க? பா.ஜ., - எம்.பி., எதிர்ப்பு

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: 'ரயில்களில், 'மசாஜ்' சேவை வழங்கும் திட்டம், நம்ம கலாசாரத்துக்கு ஒத்து வராது; அதனால், இதை கைவிட வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி., சங்கர் லால்வாணி கடிதம் எழுதியுள்ளார்.'மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் இருந்து இயக்கப்படும், 39 ரயில்களில், பயணியருக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும்' என,

புதுடில்லி: 'ரயில்களில், 'மசாஜ்' சேவை வழங்கும் திட்டம், நம்ம கலாசாரத்துக்கு ஒத்து வராது; அதனால், இதை கைவிட வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி., சங்கர் லால்வாணி கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news



'மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் இருந்து இயக்கப்படும், 39 ரயில்களில், பயணியருக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும்' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு, இந்துார் தொகுதியின், பா.ஜ., - எம்.பி., சங்கர் லால்வாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், லால்வாணி கூறியுள்ளதாவது: ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வகையிலும், பயணியரை ஈர்க்கும் வகையிலும், இந்தூரில் இருந்து இயக்கப்படும், 39 ரயில்களில், மசாஜ் சேவை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பெண் பயணியர் முன்னிலையில் மசாஜ் செய்வது, நம் கலாசாரத்துக்கு ஒத்து வராது. பயணியருக்கு மருத்துவ வசதி அளிப்பது, ரயில்களில் டாக்டர்கள் வசதி அளிப்பது ஆகியவை முக்கியமானது. ஆனால், மசாஜ் போன்ற தரமற்ற சேவைகள் தேவையில்லை என்பது, என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த மசாஜ் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-201911:29:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் இந்த சேவையை வழங்கலாம்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஜூன்-201908:41:50 IST Report Abuse
அசோக்ராஜ் பல பணக்கார தொழில் அதிபர்களுக்கு ஒய்வு நேரம் கிடைப்பதில்லை. அது வேண்டியே விமானம் தவிர்த்து ரயிலில் பயணம் செய்வோர் உண்டு. அவர்களுக்கு ரிலாக்ஸ் செய்ய மசாஜ் வசதிகள் நல்லது. அரசுக்கு வருமானமும் தெராபிஸ்ட்டுகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
Rate this:
14-ஜூன்-201911:04:19 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani)இதன்மூலம் திரு அசோக்ராஜ் அவர்களுக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கும். ஓய்வு நேரம் இல்லையாம் அதனால் ரயிலில் பயணம் செய்கிறார்களாம். அற்புதமான விளக்கம்....
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
14-ஜூன்-201908:37:49 IST Report Abuse
venkata achacharri பி ஜி பி யில் இது போல நல்லவர்கள் உண்ட மகிழ்ச்சி இதுபோல நல்லவர்கள் தலைமை தவறு செய்யும் பொது தங்கள் கருத்தை தப்பு என்று சொன்னால் மட்டும் போதும் இன்னும் ஆயிரம் வருடங்கள் பி ஜி பி ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X