சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 13, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

காங்., செய்தி தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா: லோக்சபா தேர்தல் தோல்விக்காக, காங்., தலைமையை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியின் தலைராக, ராகுல் தொடர்ந்து இருப்பார். இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

டவுட் தனபாலு: ராகுலை யாரும் ராஜினாமா செய்யச் சொல்லலை... அவராகத்தான், இந்த முடிவை எடுத்தாரு... நீங்க இவ்வளவு உறுதியாகச் சொல்வதைப் பார்த்தால், முன்கூட்டியே எல்லாம் பேசி முடித்து தான், இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ என்ற, 'டவுட்' வலுப்படுதே...!

***

கர்நாடகா முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான எடியூரப்பா: பெல்லாரியில், உருக்கு ஆலைக்கு, 3,667 ஏக்கர் நிலத்தை விற்கும், அரசின் முடிவை கண்டித்து, பா.ஜ., சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: 'நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து, சில சமூக விரோத அமைப்புகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகின்றன... இவர்களை கட்டுப்படுத்தணும்'னு, இங்குள்ள, பா.ஜ.,வினர் சொல்லி வர்றாங்க... அதற்கும், இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

***

ஜம்மு - காஷ்மீர் கவர்னர், சத்யபால் மாலிக்: எந்த பிரச்னைக்கும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். அதனால், ஜம்மு - காஷமீரில், பயங்கரவாதிகள் ஆயுதம் ஏந்துவதை விட்டு, அரசுடன் பேச முன்வர வேண்டும்.

டவுட் தனபாலு: மத்திய அரசுடன் ஆலோசித்து தான், இந்த அழைப்பை விடுக்குறீங்களா... இல்லை, இது உங்களின் தனிப்பட்ட கருத்தா... ஏன் இவ்வளவு, 'டவுட்'னா, 'பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, காங்கிரசின் வழக்கம்; தோட்டாவால் பதில் அளிப்பதே, பா.ஜ.,வின் பழக்கம்'னு, அமைச்சர்கள் துவங்கி, பிரதமர் வரை பேசி வர்றாங்களே, அதனால் தான் கேட்டோம்...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X