பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எஸ்.சி., - எஸ்.டி., பணத்தில் மோசடி
மாற்றி யோசிக்கிறது மத்திய அரசு

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையில் மோசடி செய்யப்படுவதை தடுப்பதற்காக, உதவித்தொகை வழங்கும் முறையில், மாற்றம் ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

SC,ST,எஸ்.சி.,எஸ்.டி.,பண மோசடி,மத்திய அரசு


எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமுதாய மாணவர்களுக்கு, மத்திய அரசு, பல சலுகைகள் மற்றும் உதவிகள் வழங்குகிறது.

மாற்றங்கள்:


குறிப்பாக, இந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க, உதவித் தொகை உட்பட,

பல உதவிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு தேவையான கல்வி பொருட்கள் வாங்கியதற்கான, 'பில்'களை சமர்ப்பித்தால், பணம் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதில் பலர், மோசடியாக பெற்ற பில்களை சமர்ப்பித்து, பணம் பெறுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இதை தடுக்க, புதிய விதிமுறைகளை வகுக்குமாறு, 'நிடி ஆயோக்' அமைப்பிற்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

'வவுச்சர்'


குறிப்பாக, 'வவுச்சர்' எனப்படும், தேவைப்படும் பணம் குறித்த தகவலை, மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்தால், எங்கு பொருட்களை வாங்க வேண்டுமோ, அந்த நிறுவனத்திற்கு பணம் சென்றடையும் வகையில், மாற்றங்கள் இருக்கும். அதுபோல, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை, மாணவர்களே நேரடியாக இனிமேல் வாங்க முடியாது.

Advertisement

அமல்:


மாறாக, அவர்களுக்கான உபகரணங்களை, அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வழங்கும். அதற்கான பணம், அந்த கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம், அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பிறர் கையில் அந்த பணம் கிடைக்காது. அந்த பணமும், ஆண்டுக்கு ஒரு முறை தான் வழங்கப்படும் என்பன போன்ற மாற்றங்களும், விரைவில் அமலுக்கு வர உள்ளன.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
15-ஜூன்-201907:52:57 IST Report Abuse

அம்பி ஐயர்ஆம்.... உண்மைதான்..... எஸ்.சி எஸ்.டி மற்றும் மைனாரிட்டிகளுக்காகக் கொடுக்கப்படும் ஸ்காலர்ஷிப் தொகையில் பல்வேறு முறைகேடுகளை கல்வி நிறுவனங்கள் செய்துவருகின்றன.....இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள்.... அவர்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்களை வசூல் செய்தபின்புதான் டிசி மற்றும் மார்க்ஷீட் தருவார்கள்.... அதோடு.... அவர்கள் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கும் கல்வி கற்பதாகப் பொய்யுரைத்து பணத்தினை பெற்றுக் கொள்ளையடிக்கிறார்கள்.... ஒரு ஆண்டு உதவித் தொகையானது அடுத்த ஆண்டு தான் கிடைக்கும்..... அதற்குள் அவர்களிடம் ஃபீஸ் வசூலுத்துவிடுவார்கள்.... வருகின்ற பணத்தையும் அமுக்கிவிடுவார்கள்.....அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நேர்மையானவர்களை வைத்து ரெய்டு நடத்தினால் உண்மை வெளிவரும்....

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-ஜூன்-201923:43:22 IST Report Abuse

தமிழ் மைந்தன்கருணாநிதி உயிருடன் இல்லை.....எனவே ஊழல்நடக்க வாய்ப்பில்லை

Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
20-ஜூன்-201916:03:26 IST Report Abuse

suresh kumar//தமிழ் மைந்தன் - Coiambatore,இந்தியா// இப்போ இருப்பவர்கள், அவரிடம் பயின்ற, அவரை மிஞ்சிய சிஷ்யர்கள் ...

Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
14-ஜூன்-201913:16:16 IST Report Abuse

Raghuraman Narayananமிக்க நல்லது. நேரடியாக பலன் தரும் திட்டங்கள் மற்றும் மாற்றங்கள் வரவேற்க தக்கது. அதனால்தான் பல பிராந்திய அரசியல் கட்சிகள் குய்யோ முய்யோன்னு கத்திக்கிற்று இருக்காங்க. சீர்திருத்தங்கள் வரவேற்கப் படும்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X