பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சாதனை!
நமக்கென தனி விண்வெளி ஆய்வு மையம்
2030ல் சாத்தியமாகும் என்கிறார் சிவன்

புதுடில்லி: ''வரும், 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவுக்கு என சொந்தமான, விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்படும்,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர், கே.சிவன், நேற்று கூறினார்.

சிவன்,சாதனை,விண்வெளி ஆய்வு மையம்,2030,சாத்தியமாகும்


ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் சுற்றியபடி, ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறது. அதை, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சில நாடுகளின் விண்வெளி அமைப்புகள், கூட்டாக தயாரித்துள்ளன. பூமியிலிருந்து, 400 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும், இந்த விண்வெளி ஆய்வு மையத்தை, சில சமயம் வெறும் கண்ணால் பார்க்க முடியும். இந்த மையத்திற்கு, விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் பணியில், விண்வெளி ஓடங்கள் ஈடுபட்டுள்ளன.

எந்தவொரு நாட்டிற்கும், தனியாக விண்வெளி ஆய்வு மையம் இல்லாத நிலையில், அதை அமைக்கும் முயற்சியில், இந்தியா இறங்க உள்ளது. அதற்கு முன், 'ககன்யான்' எனப்படும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, ஆய்வு செய்யும் பணியையும், இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தப் பணி, 2022ல் நடக்கும். ஆந்திராவின், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, இரண்டு ஓடங்கள் விண்ணுக்கு ஏவப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பின், ஆள் உள்ள விண் ஓடம், விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், டில்லியில் நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்த, இஸ்ரோ தலைவர், கே.சிவன் கூறியதாவது: விண்வெளி ஆய்வுக்காக, இந்தியாவுக்கு என தனியாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை, 2030ம் ஆண்டிற்குள் ஏவ உள்ளோம். இது, 20 டன் எடையில் தயாரிக்கப்படும்; ஆய்வு மையத்தில், மனிதர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ள முடியும். அதற்கான பணியில், இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது.

துவக்கத்தில், 15 - 20 நாட்கள் தங்கியிருக்கும் வகையில், அந்த மையம் உருவாக்கப்படும். விண்வெளி ஆய்வுக்கு மனிதர்களை அனுப்பும், ககன்யான் திட்டம் வெற்றிகரமாக நடந்த பின் தான், இந்த திட்டம் வேகம் எடுக்கும். இப்போதைய எங்கள் குறிக்கோள், ககன்யான் தான். அதற்கு முன், ஜூலை, 15ல், சந்திரயான் - 2 திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். சந்திரன் என அழைக்கப்படும் நிலவை ஆராய, சந்திரயான் - 1 திட்டம், 10 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. இப்போது, அடுத்த கட்டத்தில் உள்ளோம். இவ்வாறு, சிவன் கூறினார்.

இந்த ஆண்டில் இஸ்ரோ சாதனை:


25.01.19 - பி.எஸ்.எல்.வி., சி - 44 ராக்கெட், மைக்ரோசாட் - ஆர் மற்றும் கலாம்சாட் - வி2 செயற்கைக்கோள்

Advertisement

06.02.2019 - ஜிசாட் - 31 - பிரெஞ்ச் கயானா
01.04.2019 - பி.எஸ்.எல்.வி., சி - 45 , எமிசேட் செயற்கைக்கோள் மற்றும் 28 பிற நாடுகளின் செயற்கைக்கோள்
22.05.2019 - பி.எஸ்.எல்.வி., சி - 46, ரிசாட் - 2பி செயற்கைக்கோள்

விண்வெளி ஆய்வு மையம் இது தான்!

பூமியிலிருந்து, 400 கி.மீ., உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வு மையம், 72.8 மீட்டர் உயரம்; 108.5 மீட்டர் அகலம் கொண்டது; இதன் எடை, 4 லட்சம் கிலோ. கடந்த, 1998ல் இதற்கான பொருட்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆய்வு மையமாக உருவாக்கும் பணி தொடர்கிறது. இதில், அதிகபட்சம், ஆறு பேர் வசிக்க முடியும். இதில், இரண்டு குளியல் அறைகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை இருக்கும். இதில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்ல, ரஷ்யாவின், 'சோயுஸ்' மற்றும் அமெரிக்காவின், சிக்னஸ் என்.ஜி., - 11 விண் ஓடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


Advertisement

வாசகர் கருத்து (4+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
14-ஜூன்-201911:44:05 IST Report Abuse

மு. செந்தமிழன்விண்வெளி மையம் தமிழ்நாட்டின் தலைக்கு மேல் அமையலாம், இதனால் தமிழகத்தில் மழை பொலிவை இது தடுக்கலாம், எதற்கு எடுத்தாலும் போராடும் தமிழகத்து போராளிகள் உடனே இதை தடுக்க வேண்டும்.

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வாழ்த்துக்கள்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூன்-201907:44:43 IST Report Abuse

ஆரூர் ரங்அங்கும் நம்ம நெடுவாசல் ஜல்லிக்கட்டு கூடங்குளம் போராளிகள் போய் போராடி தடுக்கலாம்

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X