பதிவு செய்த நாள் :
முடி சூட்டியது, பா.ஜ.,
மீண்டும் அமித் ஷா

புதுடில்லி: பல்வேறு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதாலும், உட்கட்சித் தேர்தல் நடக்க உள்ளதாலும், இந்தாண்டு இறுதி வரை, பா.ஜ.,வின் தேசியத் தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தொடருகிறார். டில்லியில், நேற்று நடந்த கட்சியின் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Amit shah,அமித் ஷா,bjp,பா.ஜ.,தேசியத் தலைவர்


'கட்சியின் தலைவராக, ஒருவர் மூன்றாண்டுகளுக்கும்; அவ்வாறு இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும்' எனவும், பா.ஜ.,வின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கட்சித் தலைவராக உள்ள அமித் ஷாவின் பதவிக்காலம், இந்தாண்டு ஜனவரியில் முடிவடைந்தது. இருப்பினும், லோக்சபா தேர்தலால், கட்சியின் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தலைவர் பதவியில், அமித் ஷா தொடருவார் என, அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கு, அமித் ஷாவின் திட்டமிடல் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அவர், மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றபோது, கட்சியின் தலைவராக வேறொருவர் நியமிக்கப்படுவார் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு இறுதி வரை, கட்சியின் தலைவராக அமித் ஷா தொடருவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தற்போது, பா.ஜ., அரசு உள்ளது. இந்த மாநிலங்களில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதைத் தவிர, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும், சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

இந்தத் தேர்தல்களில் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தலைவர் பதவியில் அமித் ஷா தொடர வேண்டும் என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தவிர, உட்கட்சித் தேர்தல் விரைவில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; இதற்கான பணிகளை, அமித் ஷா துவக்கியுள்ளார்.

வரும் நவம்பர் மாதத்துக்குள், உட்கட்சித் தேர்தல் முடிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே, கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும். அதனால், மேலும், ஆறு மாதங்களுக்கு, அதாவது, இந்தாண்டு இறுதி வரை, அமித் ஷா கட்சித் தலைவராக தொடருவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், தேசிய நிர்வாகிகள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், 'பல மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடப்பதாலும், உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும் வரையிலும், கட்சியின் தலைவராக அமித் ஷா தொடர வேண்டும்' என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,

Advertisement

கட்சித் தலைவராக அமித் ஷா தொடருவாரா, புதிய தலைவர் உடனடியாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'உச்சத்தை தொடவில்லை'

கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், தேசிய நிர்வாகிகள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, கட்சியின் பொதுச் செயலர், புபேந்தர் யாதவ் கூறியதாவது: கூட்டத்தில் பேசிய, தலைவர், அமித் ஷா, 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாம் இன்னும் உச்சத்தை தொடவில்லை. மேலும், பல மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் பல பிரிவினரை நாம் சென்றடைய வேண்டும்' என்றார். தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு, அவர் நன்றி தெரிவித்தார். நாடெங்கிலும், 220 தொகுதிகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்ததற்கு, தொண்டர்களின் அயராத உழைப்பே காரணம் எனக் கூறினார். தற்போது, கட்சிக்கு, நாடு முழுவதும், 11 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும், 20 சதவீதம் உயர்த்த வேண்டும். இதற்காக, நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடக்க உள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், கட்சின் துணைத் தலைவருமான, சிவராஜ் சிங் தலைமையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-201900:38:09 IST Report Abuse

Pugazh VThere were no unparliamentary or indecent words.

Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
15-ஜூன்-201914:20:16 IST Report Abuse

Sathya Dhara சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். சட்டியில் இருக்கும் முக்கிய சொத்தே ....unparliamentary or indecent words.தான்... "no" என்று சொல்லி விட்டால் no என்று ஆகி விடுமா..... ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201915:27:56 IST Report Abuse

Endrum Indianஇந்த ஆகா ஓகோ எதற்கு, இன்னும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது அவ்வளவு தானே .

Rate this:
Nathan - Bengaluru,இந்தியா
14-ஜூன்-201914:42:53 IST Report Abuse

Nathanஇது எதிர் பார்த்தது தான்... பாஜகவின் கஜானா குஜராத்தில் இருக்கும் போது இவரை விட்டால் வேறு வழியில்லை... மூன்றாண்டுகள் கழித்து இவர் மகன் அந்த பதவிக்கு வருவார் என எதிர் பார்க்கப் படுகிறது...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X