பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
chennai,hotel,சென்னை,ஓட்டல்,lunch,மதியம்,நோ மீல்ஸ்,no meals

சென்னை: கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, சென்னை ஓட்டல்களில், இனி, மதிய சாப்பாடு கிடைக்காது. தண்ணீர் இன்றி தவிக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை, அலுவலகம் வர வேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படியும், அறிவுறுத்தி உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், லாரி தண்ணீருக்கு செலவு செய்ய முடியாமல், வீட்டை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன; நிலத்தடி நீரும் கிடைப்பதில்லை. இதனால் சென்னைவாசிகள் குடிக்க குளிக்க சமைக்க என அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல பல மாவட்டங்களிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

சென்னையில் பல பகுதிகளில் வசிப்போர் 'கேன் வாட்டர்' வாங்கி குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் லாரி தண்ணீருக்கு செலவு செய்ய முடியாமல் வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சென்னை ஓட்டல்களில் உணவு சமைக்கவும் குடிக்கவும் 'கேன்' தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்கள் கழுவ நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டது. தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான செலவும் அதிகரித்திருப்பதால் மதிய சாப்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது: இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு குறைந்த தண்ணீர் போதும். மதிய சாப்பாட்டிற்கு மட்டும் சாம்பார் ரசம் காரக்குழம்பு மோர் கூட்டு பொரியல் போன்றவை தனித்தனி பாத்திரங்களில் வழங்கப்படுகின்றன. இதனால் மற்ற உணவு வகைகளை விட சாப்பாடு தயாரிக்கவும் அவற்றை வழங்க பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவவும் அதிக தண்ணீர் செலவாகிறது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை தனியாரிடம் 1 800 ரூபாய்க்கு வாங்கினோம். சமீபத்தில் 2 500 ரூபாய்க்கு வாங்கினோம். இப்போது தட்டுப்பாடு அதிகமானதால் 5 000 ரூபாய் வரை கேட்கின்றனர்.

இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதில் சிரமம் உள்ளது. எனவே பிரச்னையை சமாளிக்க சாப்பாடு விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஓட்டல்கள் திறக்கப்படும் நேரங்களிலும் மாற்றம்

செய்யப்பட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்தால் ஓட்டல்களுக்கு யாரும் வரமாட்டார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோரி முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளோம். அப்போது ஓட்டல்களின் தண்ணீர் தேவைக்காக ஒரு நீர்நிலையை ஒதுக்குமாறு வலியுறுத்தப்படும். அந்த நீர்நிலை பகுதியை நாங்களே பராமரித்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம். குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை அதிக இடங்களில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டில் இருந்து வேலை:


இந்நிலையில் சென்னையில் கிண்டி அடையாறு திருவான்மியூர் தரமணி பெருங்குடி சோழிங்கநல்லுார் போன்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து உள்ளன. அந்நிறுவனங்கள் செயல்படும் சர்வதேச தரத்திலான கட்டடங்களில் உள்ள கழிவறை பயன்பாட்டுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்.

தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஐ.டி. நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளன.

விடுதிகள் மூடல்:


சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எழும்பூர் சென்ட்ரல் தரமணி வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆண்கள் பெண்கள் தங்கும் தனித்தனி விடுதிகள் உள்ளன. இவற்றில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்வோர் தங்கியுள்ளனர். தங்கும் விடுதிகளில் குளிக்க நிலத்தடி நீர் மட்டும் வழங்கப்படுகிறது. தற்போது நிலத்தடி நீரும் கிடைக்காததால் விடுதிகளின் சார்பில் அதிகம் செலவழித்து லாரிகளில் தண்ணீர் வாங்கி வினியோகிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் குளிக்க தண்ணீர் இல்லாததால் வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றபடி உள்ளனர். ஆண்கள் கடலோர பகுதிகளுக்கு சென்று அங்குள்ள குட்டைகளிலும் கடல் நீரிலும் காலை கடன்களை முடித்து திரும்புகின்றனர்.

தமிழகத்தில் உள்ள, ஓட்டல்களில், தண்ணீருக்கான செலவு மட்டும், வழக்கத்தை விட, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, அனைத்து ஓட்டல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை பெய்தால் தான், தண்ணீர் பிரச்னை தீரும். மழை நீர் வீணாகாமல் இருக்க, அனைத்து ஓட்டல்களிலும், மழை நீர் சேகரிக்கும் வசதியை விரைவாக ஏற்படுத்துமாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

- வெங்கடசுப்பு, தலைவர், தமிழக ஓட்டல்கள் சங்க தலைவர்.Advertisement

வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜூன்-201904:11:45 IST Report Abuse

J.V. Iyerஅய்யா?? ஏறி, குளம், குட்டையில் வீடு வாங்கியவர்கள் காலிசெய்யவும். சென்னைக்கு நல்லது. மீதிப்பேர்கள் ஏரிகளை தூர்வாரவும். மழை தண்ணீரை கிணற்றிலும், ஏரியில் சேமிக்கவும்.

Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
15-ஜூன்-201916:33:56 IST Report Abuse

muthu Rajendranஇதை நடுநிலையோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.முதலில் சென்னையின் வளர்ச்சியை ஒழுங்கு படுத்த வேண்டும் தமிழகத்தின் கால்பங்கு ஜனத்தொகை இப்போது சென்னையில் இருக்கிறது.வரும் புதிய தொழில் வணிக இதர நிறுவனங்கள் எல்லாம் சென்னையை சுற்றியே என்பதால் வானைமுட்டும் கட்டடங்களும் வளர்கின்றன. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்பது சென்னை பெருநகர வளர்ச்சியை கண்காணிக்கும் நோக்கோடு தான் நிறுவப்பட்டது.இப்போது நகரத்தின் வளர்ச்சி எல்லை மீறி போய்விட்டதால் அதன் நீர், மின் , சாலை , இதர தேவைகளை பூர்த்தி செய்வது முடியாத காரியமாகி வருகிறது. எனவே சென்னை வளர்ச்சியை அளவிட்டு புதிய தொழில்வணிக நிறுவனங்களை அடுத்த கட்ட நகரகளுக்கு நகர்த்துவது சரியாய் இருக்கும் அந்தந்த நகரங்கள் வளர்ச்சி பெரும் அடுக்கு மாடி கட்டடங்களுக்கு ஒரு உச்ச பட்ச வரையறை கொண்டுவர வேண்டும். புத்திதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு நவீன மழை சேகரிப்பு திட்டத்தை அமுல் செய்வதை கட்டாயமாக்கவேண்டும். இதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறையை குறைந்த கட்டணத்தில் அமுல் செய்யலாம். ஏற்கனவே உள்ள கட்டடங்களுக்கு புதிய உத்திகளில் குறைந்த செலவில் மழைநீர் சேகரிப்பை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கனத்தை உறுதி செய்ய குடிநீர் குழாய் பயன்படுத்துதலுக்கு மீட்டர் வைக்க வேணும். இப்போது மீட்டர் இருந்தாலும் அளவீடு செய்வதில்லை.குடிநீர் தேக்கங்கள் அவ்வப்போது தூர் வாராப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் மாநகராட்சியின் மழைநீர் வடிகால் திட்டத்தில் கழிவு நீரை கலக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .மழைநீரை சரியான முறையில் அந்தந்த பகுதியில் இணைத்து ஒழுங்கு படுத்தலாம். குடிநீரை அத்தியாவசிய உன்பொருள் என்று அறிவித்து ஆடம்பரத்திற்கு வணிக நோக்கிற்கு பயன்படுத்தத்தலுக்கு சரியான கண்காணிப்பு வேண்டும் இதில் தனி மனிதன் முதல் அரசு வரை பொறுப்புடன் செயல்படவேண்டும்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
16-ஜூன்-201903:24:15 IST Report Abuse

jagan"குறைந்த கட்டணத்தில் அமுல் செய்யலாம். ஏற்கனவே உள்ள கட்டடங்களுக்கு புதிய உத்திகளில் குறைந்த செலவில் "- எல்லாம் குறைந்த கட்டணம், செலவு...என்னய்யா இது, இலவசமா வேண்டும் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே, எல்லாம் இலவச மாயை....உரிய கட்டணம், உரிய செலவு என்று சொல்லியாவது பழகுங்கள் ...

Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201903:55:37 IST Report Abuse

Dr.C.S.Rangarajanடாக்டர் சுப்பிரமணி சுவாமி அவர்கள் இஸ்ரேல் உதவியுடன் கடல் நீரை சுத்தகரித்து குடிநீராக மாற்றுவதற்கு உதவுவதாக அறிவித்ததை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாதது எதனால்? பணம் படைத்தவர்களிடம் பலவித வரிகளின் வாயிலாக அரசின் வருவாயை பெறுக்கி அதனை வசதி இல்லாதவர்களுக்கு நலத்திட்டங்கள் வாயிலாக வசதிகள் செய்ய முயல்வதுபோல, கடல் நீர் திட்டத்தின் பயனை வசதிப்படைத்தவர்களுக்கு ஒரு வகையில் அதிக கட்டணத்தை வசூலித்து வறுமையில் உள்ளவர்களையும் பாதுகாக்க முடியாதா? தூங்காதே தம்பி என அண்ணன் சொன்னது நினைவில் இல்லையா?

Rate this:
மேலும் 102 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X