அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக மக்கள் ஏமாளிகள்
மாஜி அமைச்சர் விரக்தி

திருச்சி: ''தமிழக மக்கள், இன்னும், எத்தனை காலத்துக்குதான், ஏமாளிகளாக இருக்கப்போகின்றனரோ ,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன் விரக்தியுடன் கூறினார்.

தமிழக மக்கள், மாஜி அமைச்சர்,பொன் ராதாகிருஷ்ணன், ஏமாளிகள்,



திருச்சியில் அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், தவறு செய்து தான், 37 இடங்களில், தி.மு.க., கூட்டணியை , தமிழகத்தில் வெற்றி பெற வைத்ததா? தேர்தல் முடிவை, ஒருவரின் தலையில் மட்டும் சுமத்துவது தவறு.

'அனாதை பிள்ளைக்கு, அப்பன் யார்' என, தேடும் வேலையை வைக்காமல், கூட்டணி தோல்விக்கான பொறுப்பை, அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில், எம்.பி.,யாகி உள்ள, 37 பேரும், ஆறு மாதத்தில், தங்கள் சொத்தை விற்றாவது, விவசாய மற்றும் கல்விக் கடன்களை அடைக்க வேண்டும். இல்லா விட்டால், அவர்கள், பொய்சொல்லி, வெற்றி பெற்றதாக அர்த்தம். தமிழக தண்ணீர் பிரச்னையில், 50 ஆண்டுகளாக, ஆட்சி செய்த , அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.


காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை, கர்நாடகா கொடுக்க வேண்டும். அங்கு, காங்., கூட்டணி ஆட்சி நடப்பதால், தமிழகத்தில் இருந்து, வெற்றி பெற்ற, 37 எம்.பி.,க்கள்,

Advertisement

கர்நாடக அணையை திறந்து, தமிழகத்திற்கு, தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும்.


பிரதமர், மோடி தலைமையிலான, மத்திய அரசு, தமிழகத்துக்கு, 5 லட்சம் கோ டி ரூபாய்க்கான திட்டங்களை கொடுத்துள்ளது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், மதவாத அரசியல் நடத்துகின்றனர். தமிழக மக்கள், இன்னும் எத்தனை காலத்துக்கு தான், ஏமாளிகளாக இருக்கப்போகின்றனரோ. இவ்வாறு அவர் தெரிவித்தார்


Advertisement

வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201901:22:43 IST Report Abuse

C.Jeyabalanபாவம் சகோதரர், பொன் இராதா கிருஷ்ணன் அவருக்கு என் ஓட்டு எப்போதும் உண்டு ஆனால் பிஜேபிக்கு, என் ஓட்டு கிடையவே கிடையாது. மோடி நல்ல மனிதர் ஆனால் அவர் இன்னும் RSS -ன் அடிமையாக இருப்பது மிக பெரிய தப்பு.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
21-ஜூன்-201913:40:02 IST Report Abuse

எதிர்க்குரல் ஒருவனுக்கு அடிமையாக இருப்பதே இன்னொருவனை எட்டி உதைப்பதற்குத்தான்..அதனாலதான் சில பிண்டங்கள் காலில் விழ தயங்குவதே இல்லை. ...

Rate this:
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-201913:16:12 IST Report Abuse

Saleem கடந்த 6 மாதத்திற்கு முன்னால் இவர் சொத்தை விற்றுத்தான் விவசாயிகளுக்கு கொடுத்தாரா? மோடி, அமிட்ஷா இருவருமே அப்படித்தானா?

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஜூன்-201913:13:46 IST Report Abuse

Rafi தமிழக மக்கள் எப்போதும் ஏமாளிகள் இல்லை. அவர்களை யார் ஆள வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர்கள். இனி அரசியல் சட்டம் என்ன சொல்கின்றது, அதன்படி அரசை செயல்படவைக்க முடியும் என்பதை நாட்டு மக்களுக்கு தங்களுடைய வாத திறமையினால் நிரூபிப்பார்கள். கடந்த முறை சென்றவர்கள் எப்படி செயல் பட்டார்கள் என்பதை நன்றாக அறிந்து இப்போது தேர்ந்தெடுத்துள்ளார்கள். வானதியும், நிர்மலாவும் உங்களை எப்படி முந்தி கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து அவர்களோடு போட்டி போடுங்கள்.

Rate this:
மேலும் 111 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X