பதிவு செய்த நாள் :
சீன அதிபரின்
இதயத்தைத்தொட்ட மோடி

பிஷ்கெக்: கடந்த 2017ல் இந்தியாவும் சீனாவும் எல்லையில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட நிலைமையில் இருந்து மாறி இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வலுவான உறவை சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கினர்.

China,India,Modi,சீன அதிபர்,மோடி


இந்நிலையில் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நேற்று அவர்கள் சந்தித்து கொண்ட போது மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு சீன அதிபர் வாழ்த்து கூறினார். பதிலுக்கு ஜின்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மோடி அவரை குளிர்வித்தார். நமது அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. நீண்ட காலமாக இது தொடர்பாக இரு தரப்பும் பேச்சு நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா சீனா பூட்டான் எல்லையான டோக்லமில் 2017ல் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. அப்போது எல்லையில் இந்தியா சீனா ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து 73 நாட்கள் நீடித்த இந்த மோதல் சமரசத்துக்குப் பிறகு விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு தலைவர்களும் 10 முறை சந்தித்துள்ளனர். டோக்லம் பிரச்னைக்குப் பிறகு நான்கு முறை சந்தித்தனர். குறிப்பாக சீனாவின் வூஹானில் கடந்தாண்டு இருவரும் சந்தித்து பேச்சு நடத்தினர். அதைத் தொடர்ந்தே இரு தரப்பு உறவுகள் மேம்பட்டன.

இந்த சூழ்நிலையில் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி நடந்தது. ஆனால் பாக். கின் நட்பு நாடான சீனா இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு சீனாவின் ஆதரவுடன் மசூத் அஸார் சமீபத்தில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான அன்று முன்னிலை நிலவரம் தெரிய வந்தபோதே நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். மரபுகளுக்கு எதிராக அவர் வாழ்த்து கூறியது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் சீனா தலைமையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கான எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினர்.

சந்திப்பின் துவக்கத்திலேயே மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என ஜின்பிங் குறிப்பிட்டார். ஏற்கனவே வாழ்த்து கூறியதுடன் தற்போதும் வாழ்த்து கூறியுள்ளீர்கள். உங்களுக்கு மிகுந்த நன்றி என மோடி குறிப்பிட்டார். வரும் 15ல் ஜி ஜின்பிங் தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அதை நினைவில் வைத்து இந்திய மக்களின் சார்பில் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மோடி கூறினார். இந்த வாழ்த்தை எதிர்பார்க்காத ஜின்பிங் பூரிப்படைந்தார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் குறித்து குறிப்பாக வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் தொடர்பான இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பு குறித்து 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் மோடி கூறியுள்ளதாவது: சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு

Advertisement

மிகவும் பலனளிக்கக் கூடியதாக அமைந்தது. இரு தரப்பு உறவுகள் குறித்து மிகவும் விரிவாக இருவரும் விவாதித்தோம். பொருளாதார மற்றும் கலாசார துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீண்டும் பிரதமரானப் பிறகு சீன அதிபருடன் பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு இதுவாகும். இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற மோடியின் அழைப்பை ஜின்பிங் ஏற்றுக் கொண்டார்.

ரஷ்ய அதிபருடன் சந்திப்பு:


சீனா தலைமையிலான எட்டு நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். மாநாட்டுக்கு இடையே அவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

'சிறப்பு கூட்டாளி தனி மரியாதைக்குரியவரான விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்' என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் சமூக வலை தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

பாக். பிரச்னை:


சீன அதிபருடனான சந்திப்பின்போது அண்டை நாடான பாகிஸ்தானுடான பிரச்னைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே கூறியதாவது: சீன அதிபருடனான சந்திப்பின்போது பாக். பிரச்னை குறித்தும் மோடி பேசினார். அந்த நாட்டுடன் நட்புடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்கு அந்த நாடே இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எல்லையைத் தாண்டி நடத்தப்படும் தாக்குதல்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே பாக். குடன் அனைத்து பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்தப்படும் என்பதை மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-201912:04:15 IST Report Abuse

susainathantoklam allowed to put road for China that reason got a compromised

Rate this:
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
14-ஜூன்-201917:43:34 IST Report Abuse

Ravi Chandranமுன்னர் ராஜிவ் காந்திக்கு ரொனால்ட் ரெகன் குடை பிடித்ததை பார்க்கவில்லையா

Rate this:
Gopi - Chennai,இந்தியா
14-ஜூன்-201918:57:13 IST Report Abuse

Gopiரெண்டுபேரும் பேரு கெட்டு போனவங்க ...

Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
14-ஜூன்-201916:19:26 IST Report Abuse

Asagh busaghசீனாவ கைக்கு எட்டுற தூரத்தில தான் வைக்கணும். நமக்கு வளர்ந்த மேலை நாடுகளோடையும், ஆசியாவின் சின்ன நாடுகளோடையும், மத்திய கிழக்கு நாடுகளோடையும், இஸ்ரேலோடயும் தான் நட்பு தேவை. எதிரிக்கு எதிரி நண்பன். மேலைநாடுகளுக்கு எதிரா எதுக்கு கூவரோம்னு தெரியாமையே கூவும் மார்கத்தினரும், வெறும் பய சீமான் போல உள்ளவனுங்க கருத்தையெல்லாம் துடைச்சு போட்டுட்டு போய்கிட்டே இருக்கனும்.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X