'வாங்களேன், பேசுவோம்!' 16ல் கட்சிகளுடன் பேச்சு

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: நாளை மறுநாள்(ஜூன் 16), அனைத்து கட்சிக் கூட்டத்தை, மத்திய அரசு கூட்டுகிறது. அந்த கூட்டத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சிகளின் ஆதரவை, மத்திய அரசு கோரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.






பிரதமர் மோடியின், இரண்டாவது அரசின், முதல் கூட்டத் தொடரான, பட்ஜெட் கூட்டத் தொடர், 17ல் துவங்குகிறது. தொடர்ந்து, 40 நாட்கள் நடக்கும் இந்தத் தொடர், ஜூலை, 26ல் நிறைவடைகிறது. சில நாட்களுக்கு முன், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பிரஹலாத் ஜோஷி மற்றும் அமைச்சர்கள், டில்லியில் வசிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியா மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, பார்லிமென்டை சுமுகமாக நடத்த, ஆதரவு தருமாறு கேட்டனர்.

அந்த வகையில், அனைத்து கட்சிக் கூட்டம், நாளை மறுநாள், பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கிறது. அதில், தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் மற்றும் பிற அலுவல்களுக்கு, எதிர்க்கட்சிகளிடம், மத்திய அரசு ஆதரவு கோரும். பார்லிமென்டின் இரு அவைகளான, 545 உறுப்பினர்களை உடைய லோக்சபாவில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 353 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 245 உறுப்பினர்களை உடைய ராஜ்யசபாவில், 102 உறுப்பினர்கள் தான் உள்ளனர்.





இரு சபைகளிலும் மசோதாக்கள் நிறைவேறினால் தான், சட்டமாக மாறும் என்பதால், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை, மத்திய அரசு கோரி வருகிறது. குறிப்பாக, 'முத்தலாக்' மசோதா எனப்படும், முஸ்லிம்கள் பின்பற்றி வரும், மூன்று முறை, 'தலாக்' என்ற வார்த்தையை கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு எதிரான மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது; ராஜ்யசபாவில் முடங்கியுள்ளது. அதை, சுமுகமாக நிறைவேற்றும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201912:40:05 IST Report Abuse
karthikeyan இன்னும் சிலர் தோல்வியில் இருந்து வெளியில் வரவில்லை போல? மரண அடி கிடைத்தது அல்லவா அப்படி தான் இருக்கும், முளை குழம்பி இருக்கும் இன்னும் தெளிவடையவில்லையோ? தோல்விக்கு குறை சொல்லாமல் பப்புவை வேறு வேலை பார்க்க சொல்லுங்கள் (பப்பு வே ஒப்புக்கொண்டு விட்டான் காங்கிரஸ் தலைவர்கள் மகன்களுக்கு ஸீட் வாங்குவதில் தான் குறியா இருந்தார்கள் கட்சி வேலை செய்யவில்லை என்று இங்கு சிலர் முட்டுக்கட்டை கொடுக்கின்றனர்)
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201908:43:32 IST Report Abuse
ஆப்பு எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் ந்ல்லெண்ணம் இருந்தா, அவிங்கள்ள நாலு பேருக்காவது மந்திரி பதவி குடுத்துப் பாருங்களேன். அப்போ ஒத்துழைப்பாங்க. ஏதோ நீங்க ரொம்ப நல்லவங்க மாதிரியும், அவிங்க தேச விரோதிகள் மாதிரியும் நெனப்பு.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஜூன்-201912:41:54 IST Report Abuse
Cheran Perumalதிமுக காஞ்சு கெடக்கேங்கற அக்கறையில கேக்குறீங்க....
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201906:53:17 IST Report Abuse
Mani . V அப்படியே வெளியில் போன மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்னும் லட்சக்கணக்கில் திரும்பவில்லையாமே அதையும் பேசுங்களேன்
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
14-ஜூன்-201907:14:47 IST Report Abuse
madhavan rajanஅப்படியே சவிகித்தார் சோர் என்று சொன்னதற்கான ஆதாரங்களையும் கேட்டுப்பெறலாம்....
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
14-ஜூன்-201907:19:19 IST Report Abuse
madhavan rajanஒரு சிலர் வாங்கியதை விட அதிக வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருந்ததாக கூறுகிறார்கள். மணி அவர்கள் வெளியே போனது திரும்பவில்லை என்று கூறுகிறார். இவர்களெல்லாம் எப்போது தேர்தல் கமிஷன் ஸ்டார்க் புத்தகத்தை ஆய்வு செய்தார்கள் என்று கூறினால் அவர்கள் கூற்றை ஒப்புக்கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X