அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் விமான பயணம்; ரத்து செய்த முதல்வர் பழனிசாமி

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (53)
Advertisement

திருச்சி: தி.மு.க., தலைவர், ஸ்டாலினுடன், ஒரே விமானத்தில் பயணிப்பதை, முதல்வர் பழனிசாமி., ரத்து செய்தார்.






திருச்சி, அ.தி.மு.க., புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் ராஜ்யசபா, எம்.பி., ரத்தினவேல் மகனின் திருமண விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி நேற்று(ஜூன் 13) திருச்சி வந்தார். மீண்டும், இரவு, 8:10 மணிக்கு, 'இண்டிகோ' விமானத்தில், சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார்; இதற்கான ஏற்பாடுகளை, அரசு அதிகாரிகளும் செய்திருந்தனர்.





இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அதே விமானத்தில், சென்னை செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தி.மு.க., தரப்பில் பேசி, ஸ்டாலினை வேறு விமானத்தில் செல்லுமாறு கேட்கப்பட்டதாம். அவர்கள் மறுத்து விட்டதால், ஸ்டாலினை சந்திக்க, முதல்வர் பழனிசாமி விரும்பாமல், நாமக்கல் வழியாக, சேலத்துக்கு காரில் சென்றார். சேலத்தில் இருந்து, இரவு, 11:00 மணி விமானத்தில், சென்னை புறப்பட்டு சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜூன்-201907:55:14 IST Report Abuse
Nallavan Nallavan துஷ்டனைக் கண்டால் தூர விலகு -ன்ற பழமொழியைப் பின்பற்றுவது தவறா ??
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஜூன்-201912:52:30 IST Report Abuse
Rafi திரு ஸ்டாலினை கண்டு பயம் தவிர வேறு இல்லை. OPS மற்றும் EPS தவிர்த்து முதல்வர் என்ற பதவி கம்பீரமானவர்களே இதுவரை அலங்கரித்து வந்துள்ளார்கள். விதியின் விளையாட்டு இப்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வரினால் மாநில மக்கள் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஜூன்-201905:05:24 IST Report Abuse
meenakshisundaram சரியே ,ஜே வாக இருந்தால் இது நடக்காது, ஸ்டாலின் சத்தமின்றி பயணத்தை ரத்து செயது காரில் சென்றுவிடுவார்.இல்லையேல் ஜே அந்த ட்ரிப்பையே விமானம் செல்லாமல் செயது விடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X