அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் - முதல்வர் சந்திப்பு ஏன்?: ஜெயகுமார் புது தகவல்

Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 கவர்னர் - முதல்வர் சந்திப்பு ஏன்?: ஜெயகுமார் புது தகவல்

சென்னை:''இந்த அரசு, எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்பதை, கவர்னரை சந்தித்து, முதல்வர் விளக்கினார்,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:அமைச்சர்கள், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் ஆகியோரின் உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள், கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வரவில்லை. அதேபோல், வராத, எம்.எல்.ஏ.,க்களும், கடிதம் அனுப்பி உள்ளனர்.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மூவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளதால், அழைப்பு அனுப்பவில்லை.கவர்னரை முதல்வர் சந்திப்பது வழக்கமானது; மரியாதை நிமித்தமானது. ஜெ., ஏற்படுத்திய, இந்த அரசு, எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்பதை, கவர்னரிடம், முதல்வர் விளக்கினார்.

அ.தி.மு.க., உடையுமா என்று, காத்திருந்தனர்; ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும். கட்சியின் கொள்கைகளை வெளியில் பேசக் கூடாது என்பதற்காக, ஊடகங்களில் பேச, தற்காலிகமாக தடை போடப்பட்டுள்ளது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூன்-201923:07:16 IST Report Abuse
Nallavan Nallavan கூட்டணியின் தோல்விக்கு பாஜக -வைப் பொறுப்பாக்க முயற்சித்ததன் விளைவு இது .......
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
14-ஜூன்-201918:56:03 IST Report Abuse
krish சவாலே, சமாளி.... கவுந்து விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை. ஆளுமை மிக்க தனி தலைமை உருவாகும் வரை, அதிமுகவுக்கு தலைவலிதான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X