அரசியல் செய்தி

தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்குகடன் நிவாரணம்:

Added : ஜூன் 14, 2019
Advertisement

சென்னை:'கரும்பு விவசாயிகளுக்கு, கடன் நிவாரணம் வழங்குவதற்கு, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், கரும்பு சாகுபடி குறைந்து வருவதால், எட்டு தனியார் கரும்பு ஆலைகளும், ஒரு கூட்டுறவு கரும்பு ஆலையும், நடப்பாண்டில், கரும்பு பிழிவதை நிறுத்தியிருக்கின்றன. மற்ற ஆலைகள், தங்களது பிழி திறனில், மூன்றில் ஒரு பங்கு தான் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பாலான தனியார் ஆலைகள், வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், வராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், கட்சியை நடத்துவதற்கு, ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என, பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ஐந்தாண்டுகளாக, வறட்சியில் கரும்பு விவசாயிகள் சிக்கியுள்ளதால், அதிக அளவில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு, கடன் நிவாரணம் வழங்க, அ.தி.மு.க., அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் பெற்ற, வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடுமையான போராட்டத்தை, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X