அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களின் உணர்வுகளுக்கு எதிரான அரசு: நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement

நாகர்கோவில்:மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என்று இந்திய கம்யூ.,மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறுவது காவிரி ஆணையத்துக்கு எதிரானது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. டெல்டா பாசனத்துக்கு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை.கூடங்குளம் அணுகழிவுகளை அங்கேயே புதைக்க கூடாது. பெரும்பாலான மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 500 ஏரிகள் இருந்தது. அதில் ஐந்தாயிரம் ஏரிகள் தற்போது மாயமாகி விட்டது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தில் தண்ணீர் வியாபாரமாகி விட்டது.ஸ்டெர்லைட் பிரச்னையில் குறும்படம் வெளியிட்ட முகிலன் காணாமல் போய் 100 நாட்கள் ஆகிறது. அவரை உயிருடன் கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டுவழிசாலை போன்ற விஷயங்களில் மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூன்-201907:46:54 IST Report Abuse
ஆரூர் ரங் ஓசி அரசு வீடு கெடச்சிருச்சா? அரசு டாக்ட்டரா இருக்கிற மகள் ஏற்பாடு செஞ்சாரா? முல்லைப்பெரியாருக்காக பிறராய்கிட்ட பேசிட்டீங்களா?
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201904:55:21 IST Report Abuse
 Muruga Vel கர்நாடகாவில் கூட்டாளி காங்கிரஸ் ஆட்சி தான் நடக்குது ..ஸ்டாலின் முதல்வரான தேனும் பாலும் ஓடும்னு நினைக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X