கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
குமாரசாமி, அமைச்சரவை, விரிவாக்கம்

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்பட்டது. சங்கர் மற்றும் நாகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பா.ஜ.,வின் 'ஆப்பரேஷன் தாமரை'யிலிருந்து தப்பித்துக் கொள்ள அமைச்சரவையை விஸ்தரிக்க, முதல்வர் குமாரசாமி திட்டமிட்டார். இலக்கியவாதி கிரிஷ் கர்னாட் மறைவு காரணமாக, அமைச்சரவை விஸ்தரிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது, இன்று (ஜூன் 14) நடந்தது. காங்கிரசின் ஒரு இடம், ம.ஜ.த.,வின் இரண்டு இடங்கள் காலியாக இருந்தன. ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடம் சுயேச்சை எம்.எல்.ஏ.,வுக்கும், காங்கிரசின் ஒரு இடம் மற்றொரு சுயேச்சைக்கும் வழங்கப்பட்டது.


இதன்படி, ராணிபென்னுார் ஆர்.சங்கர், முல்பாகல் நாகேஷ் ஆகிய இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக இன்று பதவியேற்று கொண்டனர். . பெங்களூரு ராஜ்பவனில், நடந்த பதவியேற்பு விழாவில், கவர்னர் வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vvkiyer - Bangalore,இந்தியா
14-ஜூன்-201919:33:01 IST Report Abuse
vvkiyer முஹம்மது பின் thuglak படத்தில் சோ செய்த மாதிரி As Cho did in Mohammad Bib Thugllak all the MLAs can be made Dy. Chief Ministers without any portfolio. With or without portfolio a minister is a minister with opportunities to make money.
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
14-ஜூன்-201918:43:14 IST Report Abuse
krish எத்தனை காலம்தான் ஏமாற்றுவார், ஏமாறுவர் இந்த பாரத திருநாட்டில்.....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூன்-201913:48:28 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் தெளிவாக முடிவெடுக்கவில்லை என்றால் இந்த மாதிரி குழப்பங்கள் தவிர்க்க முடியாதது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X