சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடங்கியது தண்ணீர் சண்டை: பெண்ணுக்கு வெட்டு

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (37)
Advertisement

சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீருக்காக இதுவரை சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. தற்போது அது அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. சென்னையில் தண்ணீருக்காக நிறைய சண்டைகள் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் கட்டியம் கூறுகிறது.







விடுதிகள் மூடல் :


சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிந்துகொண்டே செல்கிறது. இங்கே, 600 க்கும் மேற்பட்ட ஐ.டி.,கம்பெனிகள், நுாற்றுக்கணக்கான விடுதிகள், ஓட்டல்கள், ஆண்,பெண் தங்கும் விடுதிகள், அடுக்கு மாடிகள் என்று சென்னையின் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், விடுதிகள் பல மூடப்படுகின்றன. ஹோட்டல்கள் சில அடைக்கப்பட்டுள்ளன.
ஐ.டி.,கம்பெனிகள் பல ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன.சென்னையின் தேவை ஒருநாளுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர். ஆனால், கிடைப்பது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே. ஆக, ஒரு நாளுக்கு 280 மில்லியன் லிட்டர் தண்ணீர் தட்டுப்பாட்டுடன் தான் தற்போதைய சென்னை பெருநகர் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.





4 ஏரிகள் வறண்டன :


சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஆகிய 4 ஏரிகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன. மெட்ரோ வாட்டர் எனப்படும் மாநகராட்சி விநியோக நீருக்காக பகுதிவாரியாக மக்கள் வாரக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பணம் கொடுத்து தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் முறையான தொகைக்குத் தண்ணீர் கொண்டுவந்தவர்கள் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது எனத் தெரிந்ததும் இருமடங்கு விலையை ஏற்றிவிட்டார்கள்.


புறநகர் போராட்டம் :


ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளுக்காகச் சென்னைப் புறநகர்ப் பகுதி களிலிருந்து தான் தண்ணீர் கணிசமாக கொண்டுசெல்லப்படுவதால், அங்கே சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்குப் போதிய குடிநீர் இல்லை என்ற புகார்கள் கிளம்பியுள்ளன. எனவே, அவர்கள் நீரெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறறார்கள்.
குழாய்கள் மூலம் வீடுகளுக்குத் தினசரி தண்ணீர் வழங்கப்பட்டிருந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. 2 அல்லது 3 நாள்களுக்குத் தண்ணீரின் இருப்பைப் பொறுத்து விநியோகிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் இல்லை. இதனால் மக்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள்.


4 குடங்கள் மட்டுமே :


மாநகராட்சி குடிநீர் லாரிகளுக்கு சென்னையின் பலபகுதி மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அப்படியே தண்ணீர் லாரி வந்தாலும் ஒரு வீட்டுக்கு நான்கு குடங்களில் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், தண்ணீர் பிடிக்கும் இடங்களில் எல்லாம் நெரிசல், கூச்சல், அடிதடி சண்டைகள் நடக்கின்றன.


தண்ணீர் கலவரம் :


இதனிடையே தண்ணீர் பிரச்னைக்காக, சென்னை அனகாபுத்துார் அமரேஷன் நகரில், தண்ணீர் பிரச்னையால், சுபாஷினி என்ற பெண்ணை கத்தியால் வெட்டிய சபாநாயகரின் கார் ஓட்டுநர் ஆதிமூல ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றில், தண்ணீர் பிரச்னையால், ஒரு பெண்ணை தாக்கிய சம்பவம் நடந்தது. இப்படி, தண்ணீருக்கான கலகங்கள், சண்டைகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

எனவே, தமிழக அரசு அவசர அவசியமாக இந்த தண்ணீர் பிரச்னையை கையாளாவிட்டால், கடுமையான குடிநீர், தண்ணீர் தட்டுப்பாடுகள் கலவரங்களாக வெடிக்க வாய்ப்புள்ளதையே மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன. இதை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
15-ஜூன்-201917:39:13 IST Report Abuse
balakrishnan 200 க்கும் ஐநூறுக்கும் க்கும் வோட்டை போட்டால் இப்படித்தான் இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
15-ஜூன்-201908:54:52 IST Report Abuse
arudra1951 .திராவிடன் ஆட்சி அடியோடு என்று ஒழியுமோ அன்றைக்குத்தான் இந்த நாட்டுக்கு விமோச்சனம் .
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஜூன்-201905:27:18 IST Report Abuse
meenakshisundaram குளங்களை வெட்டிய ராஜராஜ சோழனை நினைப்போமா?'கங்கை' கொண்ட சோழனை நினைப்போமா? இல்லே தண்ணி பிடிக்கவோ "தண்ணி' அடிக்கவோ போவோமா? தமிழகத்தை நினச்சா பாவமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X