பொது செய்தி

இந்தியா

ரயில்வே பல்டி: தமிழிலும் பேசலாம்

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (119)
Advertisement
ரயில்வே, பிராந்திய மொழி,

புதுடில்லி: ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான உரையாடலின் போது , தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பழைய நடைமுறையே தொடரும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான ஆலோசனையின் போது ஆங்கிலம் அல்லது ஹிந்தியை தான் பயன்படுத்த வேண்டும். அப்போது, பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிராந்திய மொழியை பயன்படுத்தும் போது, ஒருவர் கூறுவது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான உரையாடலின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என ரயில்வே சுற்றிக்கை விட்டது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேசும்போது, ஒருவர் கூறுவதை, மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போவதால், இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ரயில்வே கூறியிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர், பொது மேலாளரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, ரயில்வேத்துறையில், பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த மாதம், மதுரை, திருமங்கலத்தில் சிக்னல் கோளாறால் மாற்று பாதையில் ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. இத்தகவலை தமிழில் பரிமாற்றம் செய்தபோது, மறுமுனையில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டரால் புரிந்து கொள்ள முடியாததால், ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் ரயில்கள் இயக்கப்பட்டு, பின்னர் விபத்து தடுக்கப்பட்டது. மொழி பிரச்னையால் ஏற்பட்ட இதுபோன்ற சம்பங்களை தவிர்க்கவே, பிராந்திய மொழியில் பேச ரயில்வே தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.





ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவு, அவர்களுக்கு தெளிவாகவும், முழுமையாகவும், புரியும் வகையில் இருப்பதை கட்டுப்பாட்டு அறை உறுதி செய்ய வேண்டும். இதே போல், ஸ்டேசன் மாஸ்டர்கள் விடுக்கும் கோரிக்கை அல்லது எடுக்கும் நடவடிக்கையை, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் முழுமையாக புரிந்து கொள்வதை, ஸ்டேசன் மாஸ்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


வாபஸ்


இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றகையிட்டு போராட்டம் நடத்தினர். பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வேத்துறையில், பழைய நடைமுறையே தொடரும். புதிய உத்தரவு அனைத்து சப் டிவிஷன்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.


ஸ்டாலின் கண்டனம்


ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஜூன்-201905:15:53 IST Report Abuse
meenakshisundaram சென்னைக்காரன் பேசுற தமிழை நெல்லைக்காரன் புரிஞ்சுக்க மாட்டானே?லூஸ் மோகன் பாஷை எவனுக்கு புரியும்?அன்றே தமிழ் அறிஞர் (இவரே அந்த பட்டத்திற்கு தகுதியானவர் ) ரா .பி.சேதுப்பிள்ளை சொன்னார் -ஒருவர் பேசினாலே புரிந்து கொள்ளலாம் ,இது நெல்லை தமிழ் ,இது 'கூவத்' தமிழ் என்று .இவ்வாறு யாழ்ப்பாணத் தமிழனுக்கு அப்புறம் (அப்புறமேதான் ) நல்ல தமிழ் பேசும் நெல்லைக்காரன் இன்னும் கூவத்தமிழன் பேசுவதை வியந்து பார்க்கிறான் ,அதுக்குள்ளே accident நடந்துருமே.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201901:24:02 IST Report Abuse
ஆப்பு எதுக்கெடுத்தாலும் இந்தியைத் திணிக்க முற்படுகின்றனர். ஆங்கிலத்தில் மட்டுமே பேசணும்னா பிரச்னை வராது.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201901:24:02 IST Report Abuse
ஆப்பு எதுக்கெடுத்தாலும் இந்தியைத் திணிக்க முற்படுகின்றனர். ஆங்கிலத்தில் மட்டுமே பேசணும்னா பிரச்னை வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X