எந்த ஒரு விஷயத்தையும் ஒரே ஒரு படத்தில் சொல்வதுதான் பத்திரிகை புகைப்படக்கலை.அந்த ஒரே ஒரு படத்திற்காக படாதபாடுபடுபவர்கள்தான் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள்.
பெரும்பாலும்
திருமணம் போன்ற நிகழ்வுகளை படம் எடுக்கும் புகைப்படக்கலைஞர்களை
மனதில்வைத்துதான் புகைப்படக்கருவிகள் உருவாக்கப்படுகின்றது.
தற்போது மிர்ரர்லெஸ் கேமிரா யுகத்தில்தான் பத்திரிகையாளர்களுக்கு பயன்படக்கூடிய பல விஷயங்கள் கேமிராவில் புகுத்தப்பட்டு உள்ளது.
இது
குறித்து பாரதிகலர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் கடந்த 80ம் ஆண்டில்
இருந்து இந்த துறையில் இயங்கிவருபவரும் 200க்கும் மேற்பட்ட புகைப்பட
பயிலரங்கத்தை நடத்தியவரும் முன்னனி தொழில்நுட்ப கலைஞரும் சோனி கேமிரா
நிறுவனத்தின் துாதுவருமான பாரதி நாளை சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக
பிரேத்யேக பயிலரங்கம் நடத்த உள்ளார்.
இலவசமாக நடத்தப்படும் இந்த
பயிலரங்கத்தில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் மட்டும் பங்கேற்கலாம்
விவரத்திற்கு கிேஷாரை தொடர்பு கொள்ளவும் எண்:9840094115.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE