கவர்னர் பதவி: காத்திருக்கும் பா.ஜ.,வினர்

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (8)
Advertisement
கவர்னர், பா.ஜ., தலைவர்கள், சுஷ்மா, அத்வானி, மோடி, சுமித்ரா மகாஜன், உமாபாரதி, நரசிம்மன், சதாசிவம், ஆந்திரா, கேரளா,

புதுடில்லி: கர்நாடகா, உ.பி., மேற்கு வங்கம் உள்பட அடுத்த 3 மாதங்களில் 9 மாநிலங்களில் கவர்னர் பதவிகள் காலியாகின்றன.இப்பதவிகளை கைப்பற்றிய சில மூத்த பா.ஜ., தலைவர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். நான்கு கவர்னர்களின் பதவி ஜூலையிலும் ஆகஸ்டிலும் ஒருவரின் பதவி செப்டம்பரிலும் முடிகிறது. அடுத்த ஆண்டு மூன்று பேருக்கு பதவி காலியாகிறது.

இப்பதவிகளுக்கு அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை நியமிக்கலாம் என்றால் இவர்களின் வயது மிக அதிகமாக இருப்பதாக மோடி நினைக்கிறாராம்.ஆனால் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, முன்னாள் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா, முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, உமா பாரதி ஆகியோருக்கு கவர்னர் பதவி அளிக்கப்படலாம். உடல்நிலை உள்பட பல்வேறு காரணங்களால் இவர்கள் கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.


மேற்கு வங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி (84)யின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. அங்கு மம்தாவை சமாளிக்க வேண்டி இருப்பதால் கிரண்பேடியைப் போன்ற துணிச்சலான ஒருவரை கவர்னராக நியமிக்க மத்திய அரசு விரும்புகிறது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் திரிபாதியின் செயல்பாடு மத்திய அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. சட்டீஸ்கர், மிசோரம், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு (இப்போதைய கவர்னர் நரசிம்மன் ஒரு மாநிலத்தில் நீடிக்கப்படலாம்) தனித்தனி கவர்னர்கள் நியமிக்கப்படலாம். அப்படி நடந்தால் மொத்தம் 12 பேர் தேவைப்படுகிறது.வரும் ஆகஸ்டில் கேரள கவர்னர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிகிறது. இவரது பதவியும் மீண்டும் புதுப்பிக்கப்படலாம்.
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudalai -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201907:50:56 IST Report Abuse
sudalai nomination of subramanian swamy as governor of West Bengal is opt one. uma bharathi for Tamil nadikkira could be right choice
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201904:27:44 IST Report Abuse
J.V. Iyer முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, முன்னாள் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா இவர்கள் too soft, மிகவும் நல்லவர்கள். எதிர் காட்சிகள் உள்ள மாநிலங்களுக்கு உகந்தவர்கள் இல்லை. கிரண் பேடியை மேற்று வங்கம், உமா பாரதியை, தமிழ்நாட்டிற்கு - நியமிக்கலாம். டுமீல் போராளிகளை அடக்க உமா பாரதி தமிழ் நாட்டிற்கு வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
14-ஜூன்-201920:23:47 IST Report Abuse
Anantharaman Srinivasan Governor posts are only to enjoy as a King in states with salary house and other amenities on government expenses in lacs per month. Governor are no work more than two hours per day.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X