மொழிப்பிரச்னையை முன்னிறுத்தும் மம்தா

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (29)
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியை எதிர்கொள்ளத் தடுமாறும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மொழிப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.






பா.ஜ.,வுக்கு ஓட்டம் :


கடந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 எம்.பி.,தொகுதிகளை பா.ஜ., வென்றது. அந்த வெற்றிக்கு பின்னர் திரிணாமுல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து பா.ஜ.,வில் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஐக்கியமாகி வருகின்றனர்.


சட்டம் ஒழுங்கு :


தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியும் திரிணாமுல் எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக அதிரடியாக அறிவித்தார். தேர்தல் பிரசாரத்திலும், தேர்தலுக்கு பின்னரும் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பா.ஜ., திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க கவர்னர் திரிபாதியை அழைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதித்துள்ளார். கவர்னரும் வங்கத்தின் அனைத்துகட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். மறுபுறத்தில், கடந்த 5 நாட்களாக, டாக்டர்கள் போராட்டமும் வலுவடைந்துள்ளது.




பெங்கால் மொழி :
இதனால், அரசியல் சிக்கலை எதிர்கொண்டுள்ள மம்தா, டிவிட்டரில் மொழிப் பிரச்னையை கிளப்பும் பதிவொன்றை போட்டுள்ளார். அதில், '' நாங்கள் முன்னேறிய வங்கத்தை படைப்போம். நான் பீகார், உ.பி.,பஞ்சாப் மாநிலங்களுக்கு போனால், அம்மக்களின் மொழியில் பேசுவேன். ஆனால், உங்களால் மேற்கு வங்க தாய்மொழியான பெங்காலி மொழியில், பேசமுடியுமா?.


மொழி ஆயுதம்


நான் வங்கத்தில் தங்கியுள்ள கிரிமினல்களை, பைக்கில் சுற்றும் ரோமியோக்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்,'' என்று மறைமுகமாக பா.ஜ.,வை சாடியுள்ளார். அரசியல் ரீதியாக, பா.ஜ.,வை வீழ்த்தும் ஆயுதமாகவே, மம்தா மொழிப் பிரச்னையை கிளப்பி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.



Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RR Iyengar - Bangalore,இந்தியா
15-ஜூன்-201906:49:03 IST Report Abuse
RR Iyengar கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை (ஆங்கிலேய) கிறிஸ்தவனின் பிரித்தாளும் சூழ்ச்சியை வாடிகன் அடிமைகள் சாகும் வரை கைவிடமாட்டார்கள். நாட்டை அழித்தாலாவது பணம் சம்பாதிக்க வேண்டும், அதிகாரம் வேண்டும். இந்த நாட்டை அழிச்சிட்டு நாம எங்க வேணா போய் வாழலாம் மக்கள் எக்கேடுகெட்டு போனால் நமக்கென்ன என்ற ஆணவம். மேல இருக்கிறவன் உங்களை ஆட விட்டு வேடிக்கை பார்க்கிறான் னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. அவன் தர்ம சட்டத்தின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியது
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஜூன்-201904:55:47 IST Report Abuse
meenakshisundaram தமிழர்களைப்போலவே வங்காள மக்களும் மொழி வெறியர்கள். மஹாத்மா காந்தி ஒரு தவறை செய்து விட்டார் என்பார்கள் -இது என்னவென்றால் அவர் வங்காளியாய் பிறக்கவில்லையாம் ?எப்படி இருக்கு ?இதே கதையைத்தான் இங்கே தெற்கே உள்ளவனும் செஞ்சிக்கிட்டிருக்கான்.
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201900:00:53 IST Report Abuse
chakra மொழி பிரச்சினையை பிஜேபி கிளறினால் தேசபற்று மம்தாவோ சுடலையோ கிளறினால் குற்றம் . பகோடா பாய்ஸ் போய் ஒழுங்கா பக்கோடாவோ ஊறுகாயோ விற்கற வேலைய பாருங்க
Rate this:
Share this comment
RR Iyengar - Bangalore,இந்தியா
15-ஜூன்-201906:51:42 IST Report Abuse
RR Iyengarநீங்க அமெரிக்காவுல ஒழுங்கா உங்க வியாபாரத்தை பாருங்க. அப்புறமா எங்க நாட்டை பத்தி கவலைப்படலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X