சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 14, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்: கவர்னரை முதல்வர் சந்திப்பது வழக்கமானது; மரியாதை நிமித்தமானது. ஜெ., ஏற்படுத்திய இந்த அரசு, எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்பதை, கவர்னரிடம், முதல்வர் விளக்கினார்; வேறு விஷயம் எதுவும் இல்லை.

டவுட் தனபாலு: மூச்சுக்கு மூச்சு, இது, ஜெ., அரசுன்னு சொல்றீங்களே, அவர் என்ன இப்படியா கவர்னரைச் சந்தித்து, ஆட்சி குறித்து விளக்கம் அளித்தாரு... ஒட்டுமொத்த நாட்டில், மக்களோடும், அரசு அதிகாரிகளோடும் நெருக்கமாக இருக்கும் கவர்னர்களில், முக்கியமானவர், பன்வாரிலால் புரோஹித்... அவருக்கே விளக்க வேண்டிய அளவு தான், அரசின் செயல்பாடு இருக்கா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

***

காங்., மூத்த தலைவர், ஹரீஷ் ராவத்: பா.ஜ., கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும், லோக்சபா தேர்தலில், பொய் பிரசாரம் செய்து, வெற்றி பெற்று விட்டனர்.

டவுட் தனபாலு: தேர்தல் பிரசாரத்தில், ரபேல் விவகாரம் குறித்த நீதிமன்றத்தின் கருத்தை திரித்துப் பேசி, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியவர்கள் யாருங்க... 'நாங்களும், பல முறை, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தி இருக்கிறோம்'னு, அளந்து விட்டது யாருங்க... பொய் பிரசாரம் குறித்து, நீங்க பேசலாமா என்பது தான், என்னோட, 'டவுட்!'

***

முன்னாள் மத்தியஅமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: தேர்தல் முடிவை, ஒருவரின் தலையில் மட்டும் சுமத்துவது தவறு. 'அனாதை பிள்ளைக்கு, அப்பன் யார்' என, தேடும் வேலையை வைக்காமல், கூட்டணி தோல்விக்கான பொறுப்பை, அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: அனாதை பிள்ளைன்னு, தேர்தல் முடிவைச் சொல்றீங்களா... ஜெ., இல்லாத, அ.தி.மு.க.,வைச் சொல்றீங்களா... 'மோடியால் கிடைத்த வெற்றி'ன்னு, நாடு முழுக்க நீங்க பெருமிதமாச் சொல்வீங்க... ஆனா, 'கூட்டணியால் தோற்றோம்'னு, இங்குள்ள, அ.தி.மு.க.,வினர் புலம்பக் கூடாது என்றால், இது, எந்த ஊரு நியாயம்கறது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X