பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விவசாயிகளுக்கு ஓய்வூதியம்!
மாதம் ரூ.3,000 கிடைக்கும்

புதுடில்லி: 'விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்துக்கு, மாதம், 100 ரூபாய் செலுத்த வேண்டும்; 60 வயதான பின், அவர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயி,ஓய்வூதியம்,மாதம் ரூ.3000


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.

ஆயுள் காப்பீடு:


இதையடுத்து, நரேந்திர மோடி, கடந்த மாதம், 30ல் இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றார்; அவருடன், 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து, முதல் கேபினட் அமைச்சர்கள் கூட்டம், கடந்த மாதம்,

31ல் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஓய்வூதிய திட்டம் குறித்து, மத்திய விவசாய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாயிகள் நலனில், மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. 60 வயது முடிந்த விவசாயிகள் நலனுக்காக, புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை, அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டம், எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இலக்கு:


இந்த திட்டத்தில், 29 வயது பூர்த்தியான விவசாயிகள் சேரலாம். அவர்கள் மாதம், 100 ரூபாய் செலுத்த வேண்டும்; அதே அளவு தொகையை, மத்திய அரசும் செலுத்தும். இந்த தொகையை விவசாயிகள், 60 வயது வரை செலுத்த வேண்டும். 60 வயது முடிந்த பின், அவர்களுக்கு மாதம், குறைந்தபட்சம், 3,000 ரூபாய் ஓய்வூதியமாக, ஆயுள் முழுவதும் வழங்கப்படும். வரும், பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தில்,

Advertisement

முதல் மூன்று ஆண்டுகளில், 5 கோடி விவசாயிகளை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு:


இந்த திட்டத்தால், அரசுக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 775 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர், மாநில விவசாயத்துறை அமைச்சர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கலந்துரையாடினார். இந்த திட்டம் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மாநில அமைச்சர்களை, தோமர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201918:37:39 IST Report Abuse

Rasheelஅரசின் திட்டங்களை புரியாமல் எதிர்ப்பது தவறு. இது நமது புரிதலை தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வீட்டுக்கு வீடு குடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது 3 ஒரு குவாட்டர் விலை 100 ரூபாய். ஒரு மாதத்திற்கு இரண்டு பேர் ஒரு நாளைக்கு குடியை நிறுத்தி LIC - இந்த திட்டத்தில் போட்டால் அவர்கள் வாழ்க்கை பாதுகாக்க படுகிறது. குடும்பத்திற்கு கிடைப்பது 6000 ரூபாய். ஒரு விவசாயி 45 வயதில் இறந்தால் ஒரு அபலை விதவையின் மற்றும் அவர்களின் குழந்தயின் வாழ்க்கை பாதுகாக்க படுகிறது. அந்த விதவை கொத்தடிமை ஆக மாறுவது தடுக்கப்படும்.

Rate this:
a.s.jayachandran - chidambaram,இந்தியா
15-ஜூன்-201916:56:08 IST Report Abuse

a.s.jayachandranஏற்கனவே பதினைந்து லட்சம் கொடுத்துடீங்க இப்ப இது வேறயா?

Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201921:38:46 IST Report Abuse

Rasheelஇலவசங்களை நம்பாதே உழைத்து வாழ பழகு.எந்த அரசாங்கமும் 130 கோடி பேருக்கு - 15 லக்ஷம் - ஒவருவருக்கும் கொடுக்க முடியாது. அப்படி யாரும் சொல்ல வில்லை. தன் மானத்தோடு வாழ பழகு. ...

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஜூன்-201907:51:24 IST Report Abuse

 nicolethomsonஜெயச்சந்திரன் நான் எனது 15 லட்சத்தில் பெரும்பகுதியை பேங்கில் வந்து கொண்டிருப்பதை பார்க்கிறேன் , உங்களுக்கு மறதி நோய் பயங்கரமா இருக்கும் போல? உதாரணம் சிலிண்டர் வாங்குவது ...

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஜூன்-201914:11:09 IST Report Abuse

தமிழ் மைந்தன்அட ...........இப்போது உள்ள ரூபாய் 3000 ஆனால்....ஓய்வு காலத்தில் கூடும்..... சரி ஆப்பு அப்போ 60 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி என்ற மனநிலையில் உள்ள உங்களை போன்றவர்களை நம்பி இந்த ஊழல்கோமாளிகள் ஸ்டாலினும் ராகுலும் எப்ப ஆட்சியை பிடித்து.....மக்களின் பணத்தை ஆட்டையை போட்டு..........அதை இந்த ஆப்பு பார்த்து சந்தோஷ படுவது.......வாய்ப்பு உண்டா

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X