பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அப்பாடா... தப்பிச்சோம்!
புயல் திசை மாறியதால்
மக்கள் நிம்மதி

ஆமதாபாத்: ''குஜராத்தை தாக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, 'வாயு' புயல், திசை மாறியதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த, மூன்று லட்சம் மக்கள், வீடுகளுக்கு திரும்புகின்றனர்; பள்ளி, கல்லுாரிகள் இன்று திறக்கப்படும்,'' என, மாநில முதல்வர், விஜய் ரூபானி கூறினார்.

புயல்,திசை மாறியது,மக்கள்,நிம்மதி


அரபிக் கடலில், கடந்த, 9ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. பின், இது புயலாக மாறியது. இதற்கு, 'வாயு' என, இந்தியா பெயர் சூட்டியது. இந்தப் புயல்,

குஜராத் மாநிலத்தில், நேற்று முன்தினம் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், திடீரென புயல் திசை மாறியது. தற்போது, குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து மேற்கே, 150 கி.மீ., துாரத்தில் உள்ளது.இது, ஓமன் பகுதிக்கு செல்லலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ரூபானி, மாநில உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புயல் தாக்கும் என, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசித்த, மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தற்போது, புயல் திசை மாறி விட்டதால், மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement



முகாம்களில் இருந்து மக்கள், வீடு திரும்புகின்றனர். பள்ளி, கல்லுாரிகள் இன்று திறக்கப்படும். ஆங்காங்கே பலத்த மழை பெய்தாலும், மாநிலம் முழு பாதுகாப்பாக இருக்கிறது.முகாம்களில் இருந்து வீடு திரும்பும் மூன்று லட்சம் மக்களுக்கு, அடுத்த மூன்று நாட்களுக்கான செலவுக்காக, 5.5 கோடி ரூபாய் வழங்கப்படும். பஸ், ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
15-ஜூன்-201911:28:42 IST Report Abuse

Ashanmugamபோன மச்சான் திரும்பி வந்த மாதிரி மீண்டும் குஜராத்தில் யூ டேர்ன் எடுத்து கோரதாண்டவம் ஆடுகிறது. என்ன செய்ய போவது பொறுத்திருந்து பார்ப்போம்.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
15-ஜூன்-201920:59:54 IST Report Abuse

எதிர்க்குரல் குஜராத்தான்களுக்கு ஒன்னும் மண்ணும் ஆகாது. ...

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜூன்-201911:26:00 IST Report Abuse

Natarajan Ramanathanமீண்டும் திசைமாறும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
15-ஜூன்-201921:00:10 IST Report Abuse

எதிர்க்குரல் ஆகான். ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201908:18:54 IST Report Abuse

ஆரூர் ரங்நல்ல காப்பானுக்கு வாக்களித்தால் காக்கும் மழை

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
15-ஜூன்-201921:00:34 IST Report Abuse

எதிர்க்குரல் சேலம் கலெக்டரை விஞ்சிய அடிமை. ...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X