பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தேர்தல் பண பத்திர விபரம்
ஸ்டேட் பாங்க் தர மறுப்பு

புதுடில்லி: தேர்தல் பண பத்திரங்கள் விற்பனை தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள தகவல்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பகிர்ந்து கொள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மறுத்துள்ளது.

தேர்தல்,பண பத்திரம்,ஸ்டேட் பாங்க்,மறுப்பு


அரசியல் கட்சிகளுக்கு, பெரிய அளவில் நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள், பொதுத்துறை வங்கிகளில்

ஒன்றான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாயிலாகவே வழங்க முடியும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விற்பனை செய்யும், 'எலக்ட்ரால் பாண்ட்' எனப்படும், தேர்தல் பண பத்திரங்களை வாங்கும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணம், குறிப்பிட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக சென்றடையும்.

அந்த வகையில், 2017 - 2019 வரை, தேர்தல் பண பத்திரங்கள் சம்பந்தமாக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுப்பப்பட்ட தகவல்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்த விபரங்கள், தகவல் அறியும் சட்டத்தின் படி கேட்கப்பட்டிருந்தன. மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த, தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர் ஒருவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம், இது குறித்து கேட்டிருந்தார்.

Advertisement

அதற்கு பதிலளித்துள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 'அந்த தகவல்கள் தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்டவை என்பதால், பகிரங்கப்படுத்த முடியாது' என கூறி, தர மறுத்துள்ளது. இந்நிலையில், 2018ல், அரசியல் கட்சிகளுக்கு பண பத்திரங்களை விற்கலாம் என, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு, மத்திய நிதித்துறை உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதை அடுத்து, அந்த நடைமுறை முடக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
15-ஜூன்-201909:07:06 IST Report Abuse

GMMதேர்தல் பண பத்திர விவரம் 2017- 2019 வரை மட்டும் கேட்கும் தகவல் உரிமை உள்நோக்கம் உடையது.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
15-ஜூன்-201919:39:31 IST Report Abuse

எதிர்க்குரல் இதிலென்ன ரகசியம்?? எல்லாம் ஊரார் அறிந்ததுதான்??? உண்மை எப்படியும் வெளியேதான் வரும் அப்போ அசிங்கப்படுறதுக்கு இப்பவே ஒத்துக்கலாமே?? ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201908:25:57 IST Report Abuse

ஆரூர் ரங்எந்தத் தனிப்பட்ட நபரின் அல்லது கம்பெனியின் கொடுக்கல்வாங்கல்களையும் (வருமானவரித்துறை அமலாக்கத்துறை தவிர) வெளியிடமாட்டோம் என்ற உறுதிமொழியின் பேரில்தான் சேமிப்பு/ கரண்ட் கணக்கே துவக்கப்படுகிறது என்பது இந்த ஆளுக்கு நன்கு தெரிந்திருக்கும் வெறும் விளம்பரத்துக்காக ஆர் டி ஐயை பயன்படுத்துவது அதிகரித்துளளது

Rate this:
blocked user - blocked,மயோட்
15-ஜூன்-201906:13:57 IST Report Abuse

blocked userகுப்புசாமி தேர்தல் நிதியாக 1000 கோடி கொடுத்தார் என்று தகவல் சொன்னால் போதும். அடுத்து ஊடகங்கள் குப்புசாமியை தேடி பல வருடங்கள் திரிவார்கள். மம்தாவும் மோடியும் பிரச்சினையாகத்தெரியாது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X