டாக்டர்கள் போராட்டம்: மம்தா பிடிவாதம்

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement
டாக்டர்கள், போராட்டம், மம்தா, பிடிவாதம்

கோல்கட்டா: மம்தா பிடிவாதத்தால் டாக்டர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, கோல்கட்டா அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட, 75 வயது நோயாளி, சிகிச்சையின் போது இறந்து விட்டார். டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான், அந்த நோயாளி இறந்தார் என கூறி, அவரின் உறவினர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.





இதில், இரண்டு டாக்டர்கள் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். இதை கண்டித்து, நான்காவது நாளாக, 'ஜூனியர்' டாக்டர்கள் எனப்படும், இளம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தை கைவிட வேண்டும் என,டாக்டர்களை வலியுறுத்தாத, முதல்வர் மம்தா, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்வகையில் பேசி, பணிக்கு திரும்ப கெடுவிதித்தார்.






மேற்கு வங்க டாக்டர்களுக்குஆதரவாக அந்த மாநிலம் மட்டுமின்றி,நாடு முழுவதும், டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மம்தாவின் பிடிவாதத்தால், மேற்கு வங்க மக்கள், உரிய சிகிச்சையின்றி, அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Rengaraj - Madurai,இந்தியா
15-ஜூன்-201911:29:57 IST Report Abuse
P.Rengaraj இந்த போராட்டம் அரசியல் பின்புலம் உள்ளது என்று டாக்டர்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது. சிகிச்சை பெற வந்த நோயாளி இறந்தால் அதற்காக டாக்டரை அடிப்பது என்று வந்துவிட்டால் நாட்டில் எத்தனையோ டாக்டர்களை தாக்க வேண்டியிருக்கும். அது முறையல்லவே? அடிபட்ட டாக்டர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரசு சார்பில் யாரவது சென்று பார்த்திருக்கலாமே? கொஞ்சம் பிரச்சினை தணிந்துஇருக்குமே? இன்று டாக்டர்களை கடவுளுக்கு அடுத்தபடியாக நம்பும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதுவும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் செய்யும் வேலை புனிதமானது என்றால் சொல்லலாம் . அவர்களை அலட்சியப்படுத்துவதால் கிடைக்கும் நன்மை என்ன?
Rate this:
Share this comment
Cancel
R.Kalyanaraman - Chennai,இந்தியா
15-ஜூன்-201911:05:45 IST Report Abuse
R.Kalyanaraman இந்த அம்மா ஒரு நாள் ஓடப்போகிறாங்க. மக்களே துரத்துவார்கள். இவங்க ஏதுவுமே பிரிந்து கொள்ளமாட்டேங்கிறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
15-ஜூன்-201910:44:25 IST Report Abuse
Rohin ராவணனின் தங்கை அரக்கி சூர்ப்பனகை செய்த அட்டூழியங்களுக்கு கடைசியாக என்ன ஆனாலோ அதே கதி தான் இந்த பேகத்திற்கும் நடக்க போகிறது, அணையப்போகும் விளக்கு சுடரொளி விட்டு எரியும் என்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X