2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி கர்நாடகா அமைச்சரவை விஸ்தரிப்பு

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பெங்களூரு:கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இரண்டு சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.கூட்டணி ஒப்பந்தப்படி, காங்கிரசுக்கு, 24 அமைச்சர் பதவிகளும், ம.ஜ.த.,வுக்கு, 12 அமைச்சர் பதவிகளும் தரப்பட்டன.காங்கிரஸ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 24 இடங்களுக்கும் அமைச்சர்களை நியமித்தது. ம.ஜ.த., ஒரு அமைச்சர் பதவியை காலியாக வைத்திருந்தது.

இதற்கிடையில், ம.ஜ.த., ஒதுக்கீட்டின் கீழ் அமைச்சராக இருந்த, பகுஜன் சமாஜ் கட்சியின், மகேஷ், சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த, காங்கிரசின் வள்ளி, மார்ச்சில் காலமானார். இதனால், மூன்று அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தன.இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத, காங்., மூத்த, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கடும் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள், பா.ஜ., பக்கம் சாயவும் தயாராக இருந்தனர். இதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆட்சியை தக்க வைக்கும் வகையில், அரசுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான, முல்பாகல் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோருக்கு, நேற்று அமைச்சர் பதவி தரப்பட்டது. பெங்களூரில், கவர்னர் மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இருவருக்கும், கவர்னர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிலையில், அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
15-ஜூன்-201909:43:24 IST Report Abuse
sundarsvpr அரசியலில் ஆட்சி கவிழ்வதை தடுக்க ஆயுதம் அமைச்சர் பதவிகள் அளிப்பது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X