உறுப்பினர் சேர்க்கை| Dinamalar

உறுப்பினர் சேர்க்கை

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (1)
 உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

பா.ஜ., இன்னும் முழுமையான வெற்றி பெறவில்லை என, கட்சி தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை, 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுஉள்ளார். கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்த தினமான, ஜூலை, 6ல் துவக்கப்படும்.

சிவராஜ் சிங் சவுகான்

துணைத் தலைவர், பா.ஜ.,



இட ஒதுக்கீடு மறுப்பு

தனியார் துறையில் சிறப்பாக திறமையாக பணியாற்றும் அதிகாரிகளை, இணைச் செயலர்களாக, மத்திய அரசு நியமிக்கிறது. இது பாராட்டத்தக்கது தான். ஆனால், இதன் மூலம், அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிக்கிறது. இணைச் செயலர்கள் நியமனத்தில் அரசு, 40 சதவீத இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், இதை, மத்திய, பா.ஜ., அரசு மீறுகிறது.

ரண்தீப் சுர்ஜேவாலா

செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்


மீண்டும் ஒப்பாரி

லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வி பற்றி, சுய பரிசோதனை செய்யாமல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குறை சொல்லி, காங்கிரஸ் மீண்டும் ஒப்பாரியை துவக்கியுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என, தேர்தல் ஆணையம் ஆதாரபூர்வமாக தெரிவித்துவிட்டது. தோல்வியை ஏற்றுக் கொள்ள மன மில்லாமல், பழைய பல்லவியை, காங்., மீண்டும் பாடுவது வெட்கக்கேடு.

முக்தார் அப்பாஸ் நக்வி


மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X