பஸ்வான் மீது அதிருப்தி புதிய கட்சி துவக்கம்

Added : ஜூன் 15, 2019
Share
Advertisement

பாட்னா:லோக் ஜன சக்தி கட்சி தலைவர், ராம்விலாஸ் பஸ்வானின் நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி அடைந்த, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், மதச் சார்பற்ற லோக் ஜன சக்தி என்ற, புதிய கட்சியை துவக்கியுள்ளனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜன சக்தி கட்சியும் அங்கம் வகிக்கிறது.இந்த கட்சியின் தேசிய பொதுச் செயலர், சத்யானந்த் சர்மா, அனில் குமார் பஸ்வான், பொருளாளர் ரமேஷ் சந்திர கபூர் மற்றும் சிலர் இணைந்து, தங்கள் ஆதரவாளர்களுடன், புதிய கட்சியை துவக்கியுள்ளனர். அந்த கட்சிக்கு, மதச் சார்பற்ற லோக் ஜன சக்தி கட்சி என, பெயர் வைத்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:ராம்விலாஸ் பஸ்வான், கட்சியை, தனியார் நிறுவனம் போல் நடத்துகிறார். தேர்தல்களில் போட்டியிட, தன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே, அதிகம் வாய்ப்பு அளிக்கிறார். மீதமுள்ள ஒரு சில இடங்களையும், கட்சிக்கு தொடர்பில்லாத, பெரும் செல்வந்தர்களுக்கு வழங்குகிறார்.கட்சிக்காக, பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மதிப்பில்லை. அதனால் தான், புதிய கட்சியை துவக்கியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

லோக் ஜன சக்தி கட்சியின், பீஹார் மாநில தலைவர், பசுபதி குமார் பராஸ் கூறுகையில், ''கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர், புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளனர். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X