அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலி தொகுதிகள் இரண்டாக உயர்வு

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:தி.மு.க., - எம்.எல்.ஏ., மறைவு காரணமாக, தமிழகத்தில் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்துள்ளது.
லோக்சபா தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஒன்பது தொகுதிகளில், அ.தி.மு.க.,வும், 13 தொகுதிகளில், தி.மு.க.,வும் வெற்றி பெற்றன.
தற்போது, சட்டசபையில், சபாநாயகருடன் சேர்த்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 123 ஆகவும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 101 ஆகவும் உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒன்று மற்றும் சுயேச்சை ஒன்று என, எண்ணிக்கை இருந்தது. காங்கிரஸ், எம்.எல்.ஏ., வசந்தகுமார், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றதால், நாங்குனேரி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை ஏழாகக் குறைந்தது; நாங்குனேரி சட்டசபை தொகுதி காலியானது.

இந்நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாமணி, உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார். அதன் காரணமாக, காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, இரண்டாக அதிகரித்துள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 101ல் இருந்து, 100 ஆக குறைந்துள்ளது. காலியாக உள்ள, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில், இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201911:49:46 IST Report Abuse
Bhaskaran விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X