அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பா.ஜ.,வின் அமோக வெற்றிக்கு
மோடியே காரணம்: பஸ்வான்

சென்னை: ''லோக்சபா தேர்தலில், மோடி சுனாமியால், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது,'' என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

bjp, பா.ஜ.,வெற்றி,மோடி,காரணம்,பஸ்வான்


சென்னையில், நேற்று பஸ்வான் அளித்த பேட்டி:பிரதமர் மோடி அமைச்சரவையில் இருந்தவர்களில், ஒருவர் மீதும், ஊழல் புகார் எழவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்காக,

மோடி அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்படி இருந்தும், மோடி சுனாமியால், பா.ஜ., 303 தொகுதிகளில் வென்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.இதற்கு, மோடி மீது, நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையே காரணம்.

உ.பி., மாநிலத்தில், மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டும், படுதோல்வியை சந்தித்தன. காங்கிரஸ் தலைவர், ராகுலே தோல்வி அடைந்தார்.எதிர்க்கட்சிகள், தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது, குறை கூறுகின்றன.

Advertisement

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், அனைத்து ஏழை மக்களுக்கும், வீடுகள் கட்டி தரப்படும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிடி ஆயோக் அமைப்பால் வரையறுக்கப்பட்ட அளவுக்கு, இந்திய உணவு கழகம், அனைத்து மாநிலங்களுக்கும், உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
15-ஜூன்-201916:15:15 IST Report Abuse

Aarkayசந்தேகத்திற்கிடமில்லாமல், மக்கள் மோடி அவர்களுக்காகவே வாக்களித்தனர். அடுத்தபடியாக. ராகுல் வின்சியும் பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். தன் இலக்கற்ற, அர்த்தமற்ற பிதற்றல், உளறல்களால் பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டார் நம் இளவல்

Rate this:
Suresh - chennai,இந்தியா
15-ஜூன்-201908:46:40 IST Report Abuse

Sureshதேர்தலில் மோடி அலை வீசவில்லை. சொல்லப் போனால், மோடி எதிர்ப்பு அலைதான் பரவலாக இருந்தது. அதையும் மீறி, பா ஜ ஜெயித்ததுக்கு காரணம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரச்சார யுக்தி சரியில்லாமல் போனதுதான்.

Rate this:
blocked user - blocked,மயோட்
15-ஜூன்-201911:57:03 IST Report Abuse

blocked userபிரச்சாரத்தால் மட்டும் ஜெயிக்க முடியும் என்று நம்புவது மடமை. ...

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15-ஜூன்-201921:41:54 IST Report Abuse

Aarkayசுனா பானா கிணற்றுத்தவளையாக இருக்காதீர்கள் எதிர்க்கட்சிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட, ஓட்டை ஏலம் விட்டு, விலை நிர்ணயம் செய்யும் டாஸ்மாக் கும்பலால் மற்றும், ஊழல் அதிமுகவுடன் இணைந்தாலும் மட்டுமே, பாஜக தமிழகத்தில் தோற்றது. நாலாம் கிளாஸ் படித்த ABCD கூடத்தெரியாத அதிமேதாவிகளெல்லாம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களைக்குறித்து பரப்பிய பொய்ப்பிரச்சாரங்களை நம்பும் மூடர்கூட்டம் அதன் பலனை அனுபவிப்பார்கள் தமிழகம் இனி பின்தங்கிய மாநிலங்களில் முதலிடம் பெரும் படித்த மக்களும், இளைஞர்களும் இங்கும் மோடியையே விரும்பினார்கள் ஆனால், இங்கு பெரும்பான்மை, குடிகாரர்களுக்கு, படிக்காதவர்களும்தானே ...

Rate this:
Suresh - chennai,இந்தியா
15-ஜூன்-201908:43:02 IST Report Abuse

Suresh.......

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X