பதிவு செய்த நாள் :
பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் மீது நடவடிக்கை
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்
பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிஷ்கெக்: ''பயங்கரவாதத்துக்கு உதவும் நிதி உதவி அளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்கும் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகளை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும் '' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பயங்கரவாதம்,உதவு நாடுகள், நடவடிக்கை,பிரதமர்,மோடி,வலியுறுத்தல்


மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்களாக நடந்தது. இந்த அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் முழுவதும் பயங்கரவாதம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் சமீபத்தில் இலங்கை சென்றேன். அங்கு ஐ.எஸ்., பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை பார்வையிட்டேன். பயங்கரவாதத்தின் கோர முகத்தை நேரில் பார்த்து கவலை அடைந்தேன்.

எந்த பாவமும் அறியாத அப்பாவி மக்கள் பலர் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டது வருத்தம் அளித்தது.

இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இனி எங்கும் நடக்கக் கூடாது என்பதே எங்கள் விருப்பம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு உதவும் ஒத்துழைப்பு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

இதற்காக சர்வதேச அளவில் ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும். கலாசாரமும் இலக்கியமும் சமுதாயத்துக்கு சாதகமான பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளன. இளைஞர்கள் மனதில் பழமைவாத நடவடிக்கைகள் வேரூன்றாமல் இருப்பதற்கு இலக்கியமும் கலாசாரமும் உதவும்.

வர்த்தகம்:
மக்களுடைய எதிர்காலத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைய வேண்டும். தன்னிச்சையான வர்த்தக நடவடிக்கைகளால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது. எனவே குறிப்பிட்ட விதிமுறையை அடிப்படையாக வைத்து வெளிப்படையான பாரபட்சமற்ற பலதரப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிர்கிஸ்தான் நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்த ஐந்து ஆண்டுக்கா செயல்திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி பேசியபோது அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் மேடையில் அமர்ந்திருந்தார்.

Advertisement

இம்ரான் கானை சந்திக்க மறுப்பு:

ஜம்மு - காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடுகிறது. இதனால் பாகிஸ்தானுடனான நட்பு ரீதியான பேச்சை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்பதால் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பாக். பிரதமர் இம்ரான் கானை சந்திக்க பிரதமர் மோடி மறுத்து விட்டார். இரவு விருந்துக்காக அனைத்து தலைவர்களும் அமர்ந்திருந்தபோதும் மோடியும் இம்ரான் கானும் எதுவும் பேசவில்லை. இரு தலைவர்களுக்கும் இடையே மரியாதை நிமித்தமான கை குலுக்கல்கள் கூட நடக்கவில்லை.


சபை நாகரீகம் தெரியாதா

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர். திடீரென அரசியலுக்கு வந்தவர் என்பதால் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரிகம் கூட அவருக்கு தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு உலக நாடுகளின் தலைவர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் சவுதி அரேபிய நாட்டுக்கு சென்ற இம்ரான் கான் சவுதி இளவரசரை அவமதிக்கும் வகையில் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற இம்ரான் கான் மற்ற நாடுகளின் தலைவர்கள் மேடைக்கு வரும்போது எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தார். மற்ற தலைவர்கள் எல்லாம் மரியாதைக்காக எழுந்து நின்றபோது இம்ரான் கான் மட்டும் அதை பொருட்படுத்தாமல் இருக்கையில் அமர்ந்திருந்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஜூன்-201914:24:45 IST Report Abuse

தமிழ் மைந்தன்அப்படியே உள்நாட்டில் நடவடிக்கை எடுத்தால் எங்கள் கட்சியை அழிக்க சதி என திமுக மற்றும் காங்கிரஸ் போராட்டம் நடத்துமே.......என்ன செய்வது

Rate this:
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
15-ஜூன்-201909:58:13 IST Report Abuse

ரபேல் ராகுல் பாய்எங்கப்பா அமைதி மார்கத்தில் இருந்து ஒருவனையும் ஆளை காணும்...??

Rate this:
blocked user - blocked,மயோட்
15-ஜூன்-201906:02:51 IST Report Abuse

blocked userஇம்ரான் சித்து போன்ற ஒரு அரை குறை. சவூதி மன்னரை அவமதித்தார்... இப்பொழுது வேற்று நாட்டு தலைவர்களை அவமதித்தார். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருப்பார்? அன்று பங்களாதேஷில் சிக்கிய 90 000 பாகிஸ்தானிய இராணுவத்தினரை மொத்தமாக அழித்து இருந்தால் இந்தியா என்ற ஒரு பயம் இருந்திருக்கும். இன்று தினம் தீவிரவாதிகளிடம் போராடும் நிலை. அடிப்படை வாத இஸ்லாத்தை ஆதரித்த எந்த நாடும் நன்றாக வாழ்ந்தது இல்லை என்பதை பாக்கிகள் மறந்துவிட்டார்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X