பதிவு செய்த நாள் :
விஸ்வரூபம்!
மே.வங்க டாக்டர்கள் வேலைநிறுத்தம் விவகாரம்...
ஆதரவு தெரிவித்து 17ல் நாடு தழுவிய, 'ஸ்டிரைக்'

கோல்கட்டா: 'பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும்' என, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் விடுத்த கெடுவை புறக்கணித்த, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், 'ஜூனியர்' டாக்டர்கள், நேற்று, நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். போராடும் மேற்கு வங்க டாக்டர்களுக்கு ஆதரவாக, நாளை மறுநாள், நாடு தழுவிய அளவில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட, அரசு டாக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அவசர சிகிச்சை தவிர்த்து, பிற மருத்துவ சேவைகளில், அன்றைய நாளில், டாக்டர்கள் ஈடுபட மாட்டார்கள் என, அறிவித்துள்ளனர்.

டாக்டர்கள்,வேலைநிறுத்தம்,விஸ்வரூபம்நடந்தது என்ன?கடந்த சனிக்கிழமை இரவு, கோல்கட்டா அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட, 75 வயது நோயாளி, சிகிச்சையின் போது இறந்து விட்டார். டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான், அந்த நோயாளி இறந்தார் என கூறி, அவரின் உறவினர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு டாக்டர்கள் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். இதை கண்டித்து, நான்காவது நாளாக, 'ஜூனியர்' டாக்டர்கள் எனப்படும், இளம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என, டாக்டர்களை வலியுறுத்தாத, முதல்வர் மம்தா, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி, பணிக்கு திரும்ப

கெடுவிதித்தார். மேற்கு வங்க டாக்டர்களுக்கு ஆதரவாக அந்த மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதும், டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மம்தாவின் பிடிவாதத்தால், மேற்கு வங்க மக்கள், உரிய சிகிச்சையின்றி, அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


கருப்பு, 'பேட்ஜ்':மேற்கு வங்க டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில், அனைத்து டாக்டர்களும், கருப்பு, 'பேட்ஜ்' அணிந்து, நேற்று பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின், மாநில நிர்வாகி, பெருமாள் கூறியதாவது: படுகாயமடைந்த டாக்டருக்கு ஆறுதலாக கருத்து கூறாமல், டாக்டர்களுக்கு எதிராக, மேற்கு வங்க முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்; அதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், டாக்டர்கள் தாக்கப்படுவது, தமிழகத்திலும் நடைபெறுகிறது. தாக்குதல்கள் தொடராமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


மம்தா அரசுக்கு கோர்ட் உத்தரவு:மேற்கு வங்க டாக்டர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், பொதுநலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை நேற்று, நீதிபதிகள், ராதாகிருஷ்ணன் மற்றும் சுவ்ரா கோஷ் விசாரித்தனர். வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என, எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறக்காத நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு, வேலைநிறுத்தத்தை டாக்டர்கள் கைவிட வலியுறுத்த வேண்டும் என, உத்தரவிட்டனர். அதுபோல, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement

மத்திய அமைச்சருடன் சங்கத்தினர் சந்திப்பு:டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்து, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டனர். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்; கண்காணிப்பு, 'கேமரா'க்கள் பொருத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர். மேற்கு வங்க விவகாரத்தை கண்டித்து, டில்லியில் உள்ள தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் சங்கத்தினர், நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.

பெங்காலி படிப்பது அவசியம்!

டாக்டர்கள் போராட்டத்தை துாண்டி விடுவது, வெளியாட்கள் தான். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'கோல்மால்' செய்து, அதிக இடங்களை, பா.ஜ., பெற்று விட்டது. அந்த வெற்றியால் இப்போது அவர்கள், மேற்கு வங்க மக்களையும், சிறுபான்மையினரையும் தாக்க துவங்கியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது. இந்த மாநிலத்தில் வசிப்பவர்கள், பெங்காலி மொழியை, பேச கற்றுக் கொள்ள வேண்டும்.

-மம்தா பானர்ஜி, முதல்வர், மேற்கு வங்கம், திரிணமுல் காங்கிரஸ்Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
15-ஜூன்-201921:52:55 IST Report Abuse

Rajanசூசை சொன்ன மாதிரி மொழி போர், momathaa மீண்டும் பிரதமர் bengalla

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஜூன்-201920:55:51 IST Report Abuse

r.sundaramமிக உயரிய பதவியில் இருப்பவர்களுக்கு கோபம் வரக்கூடாது. இங்கு மம்தா பேகத்துக்கு கோபம் தான் குணம் என்றால் யாரிடம் பொய் முட்டிக்கொள்வது. நாடாளுமன்ற தேர்தலில் பி ஜெ பி, மேற்கு வங்கத்தில் பதினெட்டு இடங்களில் வெற்றி பெற்றதை அவரால் ஜீரணிக்க முடிய வில்லை. ஆதலால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், வங்கத்தில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் பி ஜெ பியை குறை கூறுகிறார். மருத்துவர்களை தாக்கியவர்களுக்கும் திரிணமூல் கட்சிக்கும் எதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கும் போல் தெரிகிறது. அதனால் தாம் மம்தா பேகம் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார். நடப்பவை எல்லாம் நல்லதாக தெரிய வில்லை.

Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
15-ஜூன்-201920:12:55 IST Report Abuse

தஞ்சை மன்னர் மறுபடியும் ஒரு அரசியல் சாணக்கியன் ஸ்டாலின் என்பதை நிரூபித்து விட்டார்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X