அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் டிரம்ப் :காமேனி விமர்சனம்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் டிரம்ப் :காமேனி விமர்சனம்

தெஹ்ரான்,:''பேச்சு வார்த்தை நடத்தும் அளவிற்கு டிரம்ப் தகுதியான ஆள் இல்லை '' என ஈரான் நாட்டின் மதத் தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார்.

2015ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. ஒபாமா காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் அரசு ஏற்கவில்லை. 'ஈரான் ஒப்பந்தத்தை மீறி விட்டது என்றும் ஒப்பந்தத்தால் அமெரிக்காவிற்கு எந்த பலனும் இல்லை' எனக் கூறி அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.





ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன் அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகம் செய்து வந்த இந்தியா, சீனா, ரஷ்யா, துருக்கி உட்பட 8 நாடுகளுக்கு வர்த்தகத்தை முடித்து கொள்ள நிர்பந்தித்தார். இதனால் ஈரானின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் உள்ள ஈரான் உலக நாடுகள் எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் ேஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என எச்சரித்தது. பதிலுக்கு அமெரிக்காவை ஈரான் அச்சுறுத்துவதாக கூறி பாரசீக வளைகுடா கடல் பகுதியில் தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை டிரம்ப் நிறுத்தினார். இதனால் இருநாட்டுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிரம்ப் டுவிட்டரில் 'ஈரான் விவகாரத்தில் பேச்சு வார்த்தைக்கு தயார்' என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக காமேனி ''ஈரான் வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு டிரம்ப் தகுதியான நபர் இல்லை டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவும் இல்லை என்றும் கூறினேன் '' என்று தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். காமேனியின் இந்த பேச்சால் கடும் ஆத்திரத்தில் உள்ளார் டிரம்ப்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
15-ஜூன்-201911:21:58 IST Report Abuse
DSM .S/o PLM அமேரிக்கா பொருளாதாரம் என்று பாகிஸ்தானின் நிலைக்கு வருமோ அன்றுதான் உலகில் அமைதி துவங்கும்.. அதே சமயம் மார்க்க மதவாதமும் அழிக்க படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201909:34:50 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan பாக்கிஸ்தான் than iran , north கொரியா க்கு அணு ஆயிதம் விற்ற நாடு ..ஏற்கனவே விற்றாகி விட்டது
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201907:47:23 IST Report Abuse
 Muruga Vel காமினி போன்ற மத குருக்கள் அரசு நிர்வாகம் செய்ய தகுதியானவர்கள் இல்லை ..இளைஞர்கள் படாத பாடு படுகிறார்கள் ..ஒரு அமெரிக்க டாலருக்கு இரான் கரன்சி ஒன்றரை லட்சம் ...இஸ்ரேல் ஒரு நாள் இவர்களின் அணு ஆயுத உலைகளை ஒரு நாள் அழிப்பார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X