சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 வயது சிறுமி கர்ப்பம் காமுக வாலிபனுக்கு வலை

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருவண்ணாமலை:திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபனை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, சேர்க்காடு பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.


கலைக்க முடியாது

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 20, என்பவனும் காதலித்து வந்தனர்.சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கார்த்திக், பல முறை உல்லாசமாக இருந்துள்ளான்; இதில் சிறுமி கர்ப்பமானார்.

'என்னை திருமணம் செய்து கொள்' என, சிறுமி கேட்க, 'கருவை கலைத்து விடு; திருமணம் செய்து கொள்கிறேன்' என, கார்த்திக் கூறியுள்ளான்.சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற சிறுமி, கருவை கலைக்க கோரினார். மருத்துவர்கள், 'நீதிமன்ற அனுமதி இருந்தால் தான், கருவை கலைக்க முடியும்' என, தெரிவித்தனர். இதனால், சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம், மங்கலத்தில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு வந்தார்.

கடந்த, 11ம் தேதி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்து, தன் கருவை கலைக்குமாறு, டாக்டர்களிடம் சிறுமி கேட்டார். 'நீதிமன்ற அனுமதியின்றி கலைக்க முடியாது' என, டாக்டர்கள் கூறினர்.

புகார்

இதையடுத்து, மங்கலம் போலீசில், சிறுமி புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஆவடி என்பதால், இந்த வழக்கை, ஆவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி போலீசார், கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X