பொது செய்தி

தமிழ்நாடு

நாடு முழுவதும் விதைப்பந்து வீசும் பணி : பயணத்தை துவங்கிய பள்ளி மாணவி

Added : ஜூன் 15, 2019
Share
Advertisement
கரூர் :கரூரைச் சேர்ந்த, தனியார் பள்ளி மாணவி, நாடு முழுவதும், விதைப்பந்து வீசும் பணியை, துவக்கினார்.கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர், ரக்ஷனா, 14; காக்காவாடியில் உள்ள, தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.இவர், சிறு வயது முதல், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, நாடு முழுவதும்,
 நாடு முழுவதும் விதைப்பந்து   வீசும் பணி : பயணத்தை துவங்கிய பள்ளி மாணவி

கரூர் :கரூரைச் சேர்ந்த, தனியார் பள்ளி மாணவி, நாடு முழுவதும், விதைப்பந்து வீசும் பணியை, துவக்கினார்.

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர், ரக்ஷனா, 14; காக்காவாடியில் உள்ள, தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.இவர், சிறு வயது முதல், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, நாடு முழுவதும், விதைப்பந்துகளை வீசும் பணியை, நேற்று துவக்கினார்.

பணியை துவக்கி வைத்த, கரூர் கோட்ட, தலைமை வன அலுவலர், நடராஜன் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், 2011 முதல், இதுவரை, 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனால், 2006ல், 1.5 சதவீதமாக இருந்த வனப்பரப்பு, தற்போது, 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.ரக்ஷனா போல, சமூக நலத்தில் ஆர்வம் உள்ளோரால், அதிக மரக் கன்றுகள் நடப்படுகின்றன. இதன் மூலம், எதிர்காலத்தில், தேவையான மழை பெற முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாணவி ரக்ஷனா பேசியதாவது:பூமி வெப்பமாவதைத் தடுக்க, உலக அமைதிக்காக, கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, 8,000 கி.மீ., துாரம் சென்று, நான்கு லட்சம் விதைப் பந்துகளை, வீச இருக்கிறோம். இதற்காக, மொத்த செலவு, 5 லட்சம் ரூபாய்.சமூகப் பணிக்காக, முதல்வர், இ.பி.எஸ்., வழங்கிய, 1 லட்சம் ரூபாயை, விதைப்பந்துக்காக செலவு செய்துள்ளேன். மீதி பணத்தை பெற்றோர் செலவு செய்ய உள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து, இடதுபுறமாக, காஷ்மீர் சென்று, வலதுபுறமாக, மீண்டும், கன்னியாகுமரியை அடைய உள்ளேன். இதற்கு, 30 நாட்கள் ஆகும்.என்னுடன், தந்தை உட்பட, 15 பேர் வருகின்றனர். லாரி மற்றும் காரில் பயணிக்க திட்டமிட்டு உள்ளோம்.வாகை, வேம்பு, புளி உள்ளிட்ட, 20 வகையான மரங்களின் விதைப்பந்துகளை, வீச உள்ளோம்.

மேலும், செல்லும் வழியில் உள்ள மாநிலங்களில், பெண் கல்வி, பாலியல் பிரச்னை உள்ளிட்ட, ஆறு வித பிரச்னைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X