பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஹிந்தி சுற்றறிக்கை;
ரயில்வே வாபஸ்

சென்னை: ரயில்வே இயக்க பிரிவில், நிலைய அதிகாரிகளும், போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே, தகவல்களை பறிமாற வேண்டும் என்ற உத்தரவு, வாபஸ் பெறப்படுவதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர், ராகுல் ஜெயின் கூறினார்.

ஹிந்தி,சுற்றறிக்கை,ரயில்வே,வாபஸ்


மதுரை அருகே திருமங்கலத்தில், மே மாதம், 9ம் தேதி, இரண்டு ரயில்கள், ஒரே பாதையில் எதிரெதிரே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.நிலைய அதிகாரிகளுக்கும், போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பில், மொழிப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தால், இந்த தவறு நடந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இதுபோன்ற குழப்பம் ஏற்படாமலிருக்க, இம்மாதம், 12ம் தேதி, தெற்கு ரயில்வேயின் சார்பில், ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 'ரயில் இயக்கம் தொடர்பான, அனைத்து உரையாடல்களும்,

Advertisement

ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த சுற்றறிக்கை, நேற்று வாபஸ் பெறப்பட்டதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர், ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (19+ 120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஜூன்-201916:34:09 IST Report Abuse

தமிழ் மைந்தன்அய்யா பாலாஜி அவர்களே ....இந்த ஊழல்திமுக இணையதள ஆசிரியர் திரு புகழ் ..IAS தேர்வு பற்றி அவர் கேட்டதை சொன்னார்...அதற்கான பதில்.........நீங்கள் தேர்வு நல்லது....தமிழ் உண்டு......என தெரியும்.....இருந்தும் தங்களுக்கு நன்றி

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-201915:40:25 IST Report Abuse

Pugazh Vஅரசு பள்ளிகளில் இந்தி வந்துட்டா.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் யாருமே சேராமல் வகுப்பு ஙள் எல்லாம் காலியாக இருக்கப்.போகிறது.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஜூன்-201914:19:42 IST Report Abuse

தமிழ் மைந்தன்புழுகு புகழ் கட்சி ஆட்கள் பாடம்நடத்தி எந்த மாணவன் பாசாக முடியும்......முதலில் ஒருவர் சொன்ன கருத்தை கேள்......தமிழக மாணவர்கள் தடுமாறுவது ஆங்கிலத்தில்......தேர்வு வினாதாள் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்திருக்கும்....ஹிந்தி தெரிந்திருந்தால் விடையளிக்க வாய்ப்பு உண்டு.......ஆனால் ஆங்கிலம் எளிமையானதல்ல...மேலும் ஏழைகள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தரமான ஆங்கில வாத்தியார்கள் இல்லை.....ஆங்கிலத்தில் பேசகூட பாதிபேர்களுக்கு தெரியாது......ஆனால் ஹிந்தி பணக்கார குழந்தைகள் ஆதாவது உங்க மொழியில் திமுக ஆட்கள் நடத்தும் பள்ளிகளில் படிப்பவர்கள் படித்து பாசாகவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எதிர்க்கிறது இந்த ஊழல்திமுக........ உங்களை வகுப்பெடுக்க கூப்பிட்டது சன் டுடோரியல் கல்லூரியா?.....அதன் கிளை உங்க கிராத்தில் உள்ளதா?........

Rate this:
Balaji - Chennai,இந்தியா
15-ஜூன்-201915:05:21 IST Report Abuse

Balajiஎன்ன சொல்ல வாறீங்கன்னு வெளங்கல. ஆனா NEET கேள்வித்தாள் தமிழிலும் உண்டு என்பதை மறக்க வேண்டாம். ...

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
15-ஜூன்-201921:05:05 IST Report Abuse

எதிர்க்குரல் என்னது ஹிந்தி ஆங்கிலத்தை விட எளிமையாக புரிந்து கொள்ள முடியுமா?? தமிழ் மைந்தன் அல்ல நீ ???க. தொடர்புக்கு பிறந்தவன். ஹிந்தி சினிமாவில் கூட நூற்றுக்கு எழுபது சதவீதம் ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார்கள். ஹிந்தி தேவையே இல்லாத ஆணி. ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
19-ஜூன்-201906:55:11 IST Report Abuse

Anandanஇந்த 70 வருடத்தில் திறமையான ஆங்கில வாத்தியார்கள் இல்லையாம் ஆனால் ஹிந்திக்கு திறமையான ஆசிரியர்கள் வந்துடுவாங்கலாம். தமிழ் மைந்தன் இவ்வளவு விவரமற்ற ஆளா. ஆங்கிலம் படித்தால் உலகத்தில் பல நாடுகளில் வாய்ப்பு உள்ளது. ஹிந்தி படித்தால் ? ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X