அரசியல் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மரணம்: ஸ்டாலின் அஞ்சலி

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 விக்கிரவாண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மரணம்: ஸ்டாலின் அஞ்சலி

விக்கிரவாண்டி:உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற்று வந்த, விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாமணி, நேற்று காலை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராதாமணி, 70. இவர், 2016ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டார்.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கல்லுாரி நண்பரான இவர், திருமணம் செய்து கொள்ளாமல், முழு நேரம் கட்சிப் பணியாற்றினார்.

தன் தம்பி செல்வமணியுடன், கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சற்று உடல் நலம் தேறினார்.ஆறு மாதங்களாக, வீட்டில் ஓய்வில் இருந்தார். மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம், மதியம், 12:45 மணியளவில் புதுச்சேரி வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஜிப்மர் கல்வி மைய பிளாக்கில் வைக்கப்பட்டிருந்த, ராதாமணி உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஸ்டாலின் கூறுகையில், ''ராதாமணி, 30 ஆண்டுகளாக, தி.மு.க.,வில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். அவரது மறைவு, தி.மு.க.,விற்கு பேரிழப்பு,'' என்றார்.ராதாமணி உடல், சொந்த ஊரான கலிஞ்சிக் குப்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று பகல், 3:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.

'மாஜி' எம்.பி., சிவசுப்ரமணியம் மரணம்

அரியலுார், ஆண்டிமடம் அருகே உள்ள, தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர், சிவசுப்பிரமணியம், 84. வழக்கறிஞரான இவர், தி.மு.க., சார்பில், ராஜ்யசபா, எம்.பி.,யாக, 1998 - 2004 வரை பணியாற்றினார்.சில ஆண்டுகளாக, உடல் நலக் குறைவால், சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை, 8:30 மணிக்கு, இறந்தார்.
கடந்த, 1954ல், தி.மு.க.,வில் இணைந்தார். 1971ல், ஆண்டிமடம் யூனியன் சேர்மன்; 1989ல்,
ஆண்டிமடம், எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றினார்.தற்போது, தி.மு.க.,வில், சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இவருக்கு, சிவராஜேஸ்வரி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

இவரது உடல், அஞ்சலிக்காக, ஆண்டிமடம் கிராமத்தில் உள்ள, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், வி.சி., தலைவர், திருமாவளவன் ஆகியோர், நேற்று அஞ்சலி செலுத்தினர்.சிவசுப்பிரமணியம் உடல், இன்று காலை, 10:00 மணிக்கு, தேவனுார் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-ஜூன்-201909:36:48 IST Report Abuse
THENNAVAN இங்கு ஒன்னும் அரசியல் பேசலியே ,மக்கள் கூட்டுறவு கடன் தள்ளுபடி ,நகைக்கடன் தள்ளுபடி,அப்புறம் விவசாயிகளுக்கு 72000 ரூபாய் வருசத்துக்கு , கொடுக்கணும் கல்விக்கடன் தள்ளுபடி இப்படி தமிழனுக்கு கொடுப்பதாக சொல்லி எம் பி எலெக்ஷன்ல ஜெயித்து மக்களுக்கு பட்டை நாமம் போடஇப்போது ஹிந்தி எதிர்ப்பால் மக்களை திசை திருப்புகிறார்கள் தி மு க வின் கலவனிப்பயலுக.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
15-ஜூன்-201908:13:53 IST Report Abuse
oce ஊர் பற்றி எரியும் போது ஒருவன் பீடிக்கு நெருப்பு கேட்டானாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X