அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் நாடகம் பொங்குகிறார் புகழேந்தி

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கடலுார்:''அ.தி.மு.க., வுக்கு ஒற்றைத் தலைமை தேவை என, ராஜன் செல்லப்பா கூறுவது, திட்டமிட்ட நாடகம்,'' என, கர்நாடகா மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி கூறினார்.
கடலுாரில், அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தலைமையில், தோல்வியடைந்து விட்டோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. மூன்றாவது தனிப்பெரும் கட்சியான, அ.ம.மு.க., பரிசு பெட்டி சின்னத்தை, குறுகிய காலத்தில் மக்களிடம் எடுத்துச் சென்று, சட்டசபை இடைத்தேர்தலில், 7 சதவீதம் ஓட்டுகளை தனியாக பெற்றது.
ஜெ., இருந்த போது, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., 37 இடங்களில் வெற்றி பெற்று, 60 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. ஆனால், தற்போது, அ.தி.மு.க., 18 சதவீதம் ஓட்டுகளையே பெற்றது. 'அ.தி.மு.க., வுக்கு ஒற்றை தலைமை தேவை' என, ராஜன் செல்லப்பா கூறுவது, திட்டமிட்ட நாடகம்.அ.தி.மு.க., வின் ஓட்டு வங்கி குறைந்ததை, மக்களிடம் சேராமல் இருக்க, திசை திருப்பவே முதல்வர், துணை முதல்வர் ஆகியேர், இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். தினகரன் இல்லாமல், எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது. அ.தி.மு.க.,வுக்கு ஒரே தலைமையாக, எதிர்காலத்தில் சசிகலா தலைமை ஏற்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூன்-201910:24:33 IST Report Abuse
தமிழ்வேல் நினைச்சாலே பயமா இருக்கு /// அ.தி.மு.க.,வுக்கு ஒரே தலைமையாக, எதிர்காலத்தில் சசிகலா தலைமை ஏற்பார் ///
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
15-ஜூன்-201917:04:31 IST Report Abuse
oce ஒற்றைத்தலைவராக அதிமுகவுக்கு ச்சிகலா தலைமை ஏற்பாரா. ஆறுமுக சாமி இன்னும் தீர்ப்பு சொல்லஙவில்லை. அதற்குள்ள ஆடாதே. அடங்கு. இவ்வளவு நாளா எனன பண்ணிகிட்டு இருந்தே. இப்பொ வந்து குரல் கொடுக்கிறே.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூன்-201910:28:00 IST Report Abuse
தமிழ்வேல் ஆறுமுக சாமி அறிக்கைதான் தருவார், தீர்ப்பு தரமுடியாது என்று நினைக்கின்றேன். ஆமா, அந்த கமிஷன் இன்னும் இருக்கா ? சவுண்டையே காணோம்......
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
15-ஜூன்-201917:00:15 IST Report Abuse
oce நீ தினகரனுடன் சேர்ந்து அடித்தை விட இது பெரிதல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X