மம்தா மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டிரைக்:

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (28)
Advertisement
மம்தா மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டிரைக்:

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள, அரசு மருத்துவமனையில் முதியவருக்கு . டாக்டர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறியதால் தான், இறந்தார் என கூறி முதியவரின் உறவினர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரு டாக்டர்கள், பலத்த காயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை கண்டித்து, அரசு மருத்துவமனையின் டாக்டர்கள், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு, பணிகளை புறக்கணித்துள்ளனர். இதனால், மருத்துவ சேவை கிடைக்காமல், ஏராளமானோர் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.





கோல்கட்டா டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வேகமாக பரவியுள்ளது.போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் எந்த பதிலும் இல்லை. இது குறித்து கவர்னர் கேசரி நாத் திரிபாதி கூறுகையில், முதல்வரிடமிருந்து பதில் வந்தால் மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்தை தூண்டிவிட்டதே பா.ஜ. மற்றும் கம்யூ. கட்சியினர் என மம்தா பேசியது டாகர்டகளை மேலும் ஆத்திரமடைய செய்தது, இதற்கு நிபந்தனையற்ற மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும், டாக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் போட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் மம்தா நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடத் தயார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
15-ஜூன்-201911:28:37 IST Report Abuse
R.Kalyanaraman "தன் வினை தன்னை சுடும். ஓட்டை அப்பம் வீட்டை சுடும்" மம்தா டாக்டர்களை பார்த்து பக்கத்து மாநிலத்திலுருந்து வந்து வெஸ்ட் பெங்காளில் ரகளை செய்வதாக தன் மாநிலத்து டாக்டர்களை சொல்லி இபோது மாட்டிக் கொண்டு உள்ளார். .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-201911:22:52 IST Report Abuse
Pugazh V இதேபோல் அரசு டாக்டர்கள் போராட்டத்தை ஜெயலலிதா உதாசீனம் செய்து மக்களையும் டாக்டர்களையும் அவதிப்படுத்திய போது... ஆ... இரும்பு பெண்மணி என்று காவடி தூக்கியதாக நினைவு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜூன்-201911:07:38 IST Report Abuse
Lion Drsekar இந்த உலகில் யாரை வேண்டுமானாலும் நாம் விமர்சிக்கலாம், இந்த மம்தா பேகத்தை மட்டும் நாம் விமர்சிக்கக்கூடாது, விமர்சித்தவர்கள் அனைவரும் சிறைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் பேசுவது மட்டுமே சரி, மாறாக நாம் கருத்து தெரிவித்தால் நல்லது இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X