பொது செய்தி

தமிழ்நாடு

கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கம்

Added : ஜூன் 15, 2019
Advertisement

கோவை:யு.ஜி.சி., வரையறைகளின் படி, உரிய கல்வித்தகுதியில்லாமல் அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லுாரி, பல்கலையில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட்., ஸ்லெட்., தகுதி அல்லது பி.எச்டி., கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும். சமீபத்தில், உரிய கல்வித்தகுதியில்லாதவர்களை, பணியில் அமர்த்த கூடாது என, யு.ஜி.சி., உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, தனியார் கல்லுாரி நிர்வாகங்கள், உரிய கல்வித்தகுதியில்லாதவர்களை, பணியில் சேர்க்க பல்கலைகள் தடை விதித்தன. உரிய கல்வித்தகுதி இல்லாமல் பணிபுரியும், பேராசிரியர்களின் பட்டியல் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி, அரசு கல்லுாரிகளில் மொத்த உதவி பேராசிரியர், கவுரவ விரிவுரையாளர் எண்ணிக்கை, அவர்களின் பெயர், கல்வித்தகுதி, உள்ளிட்ட முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க, உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார் .உரிய கல்வித்தகுதி இல்லாமல் பணியாற்றும், ஆயிரக்கணக்கான கவுரவ விரிவுரையாளர்கள் மத்தியில், இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X