பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களே... உங்களுக்காக...

Added : ஜூன் 15, 2019
Advertisement
 பெண்களே... உங்களுக்காக...

அலுப்பில்லாமல் டிராவல் செய்வது, டிஜிட்டல் வரங்களில் ஒன்று. 'ஆப்' ல் புக் செய்தால் அரைமணி நேரத்தில் விரும்பிய இடத்தில் ஆஜர் ஆகிறோம். ஆனால், இன்றும் டாக்சி, ஆட்டோவில் செல்ல தயங்கும் பெண்களும் இருக்கின்றனர்.இவர்களின் கவலையை போக்க வந்து விட்டது.
பிங்க் டாக்சி!
பெண்களுக்காக ரெட் டாக்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிங்க் டாக்சியின் ஓட்டுனர் பெண்களே!பிங்க் டாக்சி ஓட்டுனர்கள் நித்யா, பிரியா கூறுகையில், 'ஆண்களுக்கானதாக இருக்கும் துறையில் பெண்கள் கால்பதிக்க, வாய்ப்புகள் மட்டுமல்ல பாதுகாப்பான சூழலும் இருப்பது அவசியம். தற்போது எங்களுக்கென தனி அடையாளம் கிடைத்துள்ளது. காலை துவங்குவது, இரவு முடிப்பது என இரு வேளையும், எங்கள் வசதிக்கேற்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிங்க் டாக்சியில் பாதுகாப்புக்கென, 'பேனிக்' பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. அழுத்தினால், அலுவலகத்திற்கு தகவல் சென்று விடும். பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஆண் ஓட்டுனர்களின் ஆதரவு, தைரியம் அளிக்கிறது' என்றனர்.
ரெட் டாக்சி நிறுவன வணிக தலைமை அதிகாரி பீட்டர் கூறுகையில், ''பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கென பிரத்யேகமாக கேப் சர்வீஸ் துவங்கியுள்ளது பயனுள்ளதாக இருக்கும். ஏழு பெண் ஓட்டுனர்கள், பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிப்பார்கள்,'' என்றார். பிங்க் டாக்சியில் பாதுகாப்புக்கென, 'பேனிக்' பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. அழுத்தினால், அலுவலகத்திற்கு தகவல் சென்று, பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X