பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நாளை கண்ணதாசன் விழா

Added : ஜூன் 15, 2019
Advertisement

கோவை:ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், கண்ணதாசன் கழகமும் இணைந்து, 12ம் ஆண்டாக கண்ணதாசன் விழாவை கோவையில் நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில், நாளை மாலை 6:15 மணிக்கு இந்நிகழ்வு துவங்குகிறது.விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு, கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது. கடந்த 2009 முதல் எழுத்தாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், திரைக்கலைஞர்கள், பதிப்பாளர்களுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு முன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சிற்பி, மாலன், கலாப்ரியா, அமுதோன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இவ்விருது பெற்றுள்ளனர். விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.விழாவுக்கு, சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.வி.ரமணி தலைமை தாங்குகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் கிருஷ்ணன், இசைக்கவி ரமணன், எழுத்தாளர் அராத்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X