பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் கவுன்சிலிங் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Added : ஜூன் 15, 2019
Advertisement

கோவை:இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில் சேரவுள்ள மாணவ, மாணவியருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், நாளை நடக்கிறது.இந்திய கணினி சங்கம்(சி.எஸ்.ஐ.,) கோவை கிளை சார்பில், நாளை காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி டீன் நாராயணசாமி, ஆன்லைன் கலந்தாய்வு குறித்து விளக்கம் அளிக்கிறார். பொறியியல் கலந்தாய்வு செயலர் புருேஷாத்தமன், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசுகின்றனர்; அனுமதி இலவசம்.மேலும் விபரங்களுக்கு, 94898 31307 என்ற மொபைல்போன் எண்ணிலோ அல்லது 0422 - 200 695 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X