பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.ஆர்.ரகுமான் இசை கேட்டு...

Added : ஜூன் 15, 2019
Advertisement
 ஏ.ஆர்.ரகுமான் இசை கேட்டு...

பார்க்க, பார்க்க பரவசமூட்டும் இயற்கை போன்றதுதான் இசையும்... மனதிற்கு பிடித்த இசையை ஒருமுறை கேட்டாலே, மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட இசையால் நம்மை ஈர்க்கிறார், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த சங்கர்,19.இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் இரண்டாமிடம், பிளஸ்2வில் பள்ளியில், மூன்றாமிடம் பெற்றவர்.
அதுமட்டுமல்ல...நல்ல பாடகர், கீபோர்டு, கிடார் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்.இதில், ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், இவருக்கு பிறவியில் இருந்தே பார்வை கிடையாது. பல்வேறு இசைப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார்.தனது விடா முயற்சி மூலம் சாதிக்க துடித்துக்கொண்டிருக்கும் அவர் நம்மிடம் பேசுகையில், ''பி.எஸ். ஜி.,கலை அறிவியல் கல்லுாரியில், பி.காம்.,முதலாமாண்டு படித்து வருகிறேன். ஏ.ஆர்.ரகுமான் சார் இசை கேட்டுதான் எனக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமே வந்தது. ஆரம்பத்தில் எனக்கு கற்று தருவதற்கு, யாரும் முன்வரவில்லை. ஸ்ரீனிவாசன் திருநாவுக்கரசு என்பவர்தான் எனக்கு இசை கற்றுத்தந்தார்.
அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் என்னால் இவ்வளவு துாரம் வர முடிந்தது,'' என்கிறார்.சொந்தமாக டியூன் போட வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் கனவு. தற்போது, யூடியூப்பில் 'ராயல் சங்கர் மியூசிக்' என்ற சேனல் ஒன்று ஆரம்பித்து, அதன்மூலம் இவரது இசை வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.''காலமும், நேரமும் சரியாக அமைந்தால், நிச்சயம் என்னுடைய விடாமுயற்சிக்கு, பலன் கிடைக்கும்,'' என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் சங்கர்.நல்ல காலம் பிறக்கப் போகுது சங்கர்... ஆல் தி பெஸ்ட்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X