பொது செய்தி

தமிழ்நாடு

நாளை நடக்கிறது... 'தினமலர்' நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ் போட்டி

Added : ஜூன் 15, 2019
Advertisement

'தினமலர்' நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ் போட்டி, நாளை 'தினமலர்' நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., மற்றும் இந்துஸ்தான் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இப்போட்டி, அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நாளை காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது; மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.போட்டியை குவிஸ் மாஸ்டர் ரங்கராஜன் நடத்துகிறார்.
போட்டிக்கு முன்பதிவு செய்யாதவர்கள், போட்டி நடக்கும் அரங்கில், நாளை காலை நேரில் வந்தும் பதிவு செய்து பங்கேற்கலாம்.பள்ளி, கல்லுாரிகளில் இருந்து எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இப்போட்டியில், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்; ஒரு அணிக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
கேள்விகள் அனைத்தும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்படும்; தகுதிச் சுற்று அடிப்படையில், 8 அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும். முதல் பரிசு, ரூ.20,000. இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு பத்தாயிரம் ரூபாய்.இறுதிப்போட்டி வரை முன்னேறும், மேலும் ஐந்து அணிகளுக்கு, ஆறுதல் பரிசாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்த போட்டியை தவற விடாதீர். அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X