சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 ஆண்டாக ஏமாற்றும் வர்த்தகர் ஆர்பிட்ரேஷனில் வழக்குப்பதிவு

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருப்பூர்:ஆடைகளை பெற்றுக்கொண்டு, மூன்று ஆண்டாக தொகை வழங்காமல் ஏமாற்றும் ஜெர்மனி வர்த்தகர் மீது திருப்பூர் ஆர்பிட்ரேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் கொங்குமெயின் ரோட்டைச்சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியுடன் வர்த்தக தொடர்புவைத்துள்ளது.
அந்நாட்டு வர்த்தகர் ஒருவர் வழங்கிய ஆர்டர் அடிப்படையில் ஆடை தயாரித்து, கடந்த 2016ல் அனுப்பியுள்ளது.துறைமுகத்திலிருந்து ஆடைகளை எடுத்துக்கொண்ட ஜெர்மனி வர்த்தகரோ, அதற்கான தொகையை, ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்கவில்லை. ஆனால், இதுவரை, ஆடைக்கான தொகை, 32 லட்சத்தை வழங்கவில்லை. இதனால், வர்த்தகரிடமிருந்து, ஆடைக்கான தொகையை பெற்றுத்தருமாறு, திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில், ஏற்றுமதி நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது; கவுன்சில் விசாரணையை துவக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X