சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1.5 டன் பாலிதீன் கவர்கள் பறிமுதல்

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, இரண்டாம் மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று பி.என்.,ரோடு, கொங்கு மெயின் ரோடு, ஓம் சக்தி கோவில் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், ஓம்சக்தி கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பை பயன்படுத்துவது தெரிய வந்தது. அங்கிருந்து, ஒரு டன் அளவிலான பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதுபோல், பி.என். ரோடு நெசவாளர் காலனியில் உள்ள ஒரு ரெடிமேடு ஜவுளி கடையில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த அரை டன் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.இரு கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள பேக்கரி, மளிகை கடை, ஓட்டல், உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X