சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கறுப்பு பேட்ஜூடன் டாக்டர்கள்

Added : ஜூன் 15, 2019
Advertisement
 தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கறுப்பு பேட்ஜூடன் டாக்டர்கள்

திருப்பூர்:மேற்குவங்கத்தில் டாக்டர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து, தங்களது எதிர்ப்பை காட்டினர்.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில்,என்.ஆர்.எஸ்., மருத்துவக் கல்லுாரியில், நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளி யின் உறவினர், டாக்டர் ஒருவரை தாக்கினார்.
இதையடுத்து, டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் டாக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், அம்மாநில டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய மருத்துவ சங்க திருப்பூர் மாவட்ட கிளை சார்பிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது. அதன்படி, நேற்று, 120 மருத்துவமனைகளைச் சேர்ந்த, 600 டாக்டர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிகாட்டினர்.
தவிர, சங்கத் தலைவர் செந்தில்குமரன் தலைமையிலான டாக்டர்கள், மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பாதுகாப்பு கருதி, மத்திய அரசால் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.தவறும்பட்சத்தில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.உடன், சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X